பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85


இலைக்கெனவே அவ்வண்ணத்தை விட்டுக்கொடுத்துள்ளேன். அறிவியலிலும் இது பொருத்தமானதாகும். என்னில் சில இனம், இளம்பசுமை இதழ்களைக் காட்டும். அவைகளும் தோற்றி அரும்பு நிலையில் இருக்கும்போது பசுமை நிறங்காட்டிப் பின்னர் தமக்குரிய நிறங்களில் மாறிவிடும். ஆனால், புற இதழ்கள் பச்ச்ை நிறத்தில் தோற்றமளிக்கும். இதுகொண்டும் இலக்கியங்களில், 'கமுகின் பாளையம் பசும் பூ' 96 'பசுமலர்ச் சுணங்கு 97 எனக் காணலாம். மேலும் வள மான பூ என்னும் பொருளிலும் பசுமை அடைமொழியாக்கப்படும். என்னில் பச்சை நிறம் இல்லாததால் மணந்தரும் பச்சிலை களாகிய துளசி, வில்வம் முதலியவற்றை என்னோடு சேர்த்தனர்; இவற்றைப் படலைப் பூ என்றனர். என்னில் கருப்பு வண்ணம்இல்லை. அக்குறையைப்போக்கக் கருநீல வண்ணத்தைக் கருமையாகவேகுறித்துப் பேசினர். நொச்சி கழிமுள்ளி முதலிய மலர்கள் கருநீலத்தவை. அவற்றைக் கருமை யாகக்கொண்டு, 'மணி துணர்ந்தன்ன? மாக்குரல் நொச்சி' 98 கருங்குரல் நொச்சி' 29 'கருநனைக் காயா 100 என்றனர். எனது வண்ணங்களில் செம்மைமுதன்மையானதுஎன்றேன். பல்வகை உணர்வுகளுக்கும் இந்நிறமே கொண்ட பூக்கள் குறிக்கப் படும் இச்செம்மையிலும் எத்துணை வகைகள்? ஒன்பான் மணி களில் மாணிக்கம் ஒன்று. இது சிவப்பு வண்ணத்தது. இச்சிவப்புள் ளும் பலவகை மாணிக்கம் உண்டு. அவை, சாதுரங்கம், குருவிந்தம், செளகந்தி, கோவாங்கு எனப்படும். இவற்றின் சிவப்பு வேறுபாட்டை எனது சிவப்பு கொண்டே குறிப்பர். தாமரை, செங்கழுநீர், மாதுளம்பூச் செம்மை - சாதுரங்கம் திலகம், கவிரமலர், - செம்மை - குருவிந்தம் செவ்வலரி, இலவமலர் செம்மை - செளகந்தி குராமலர் செம்மை- கோவாங்கு 101 எனக் கல்லாடம் விளக்குகின்றது. பிற நூல்களிலும் தனித்தனியே ge பெரும்பான் : 1. 99 புறம் : 212. 97 ஐங்: 367. 100 சிறுபான் : 185 98 புறம் : 271. 101 கல் : 98 : 81 - 89'