பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88


ஒரு கடற்கரை, அலைநீர் மோதுகின்றது. வெண்டாமரை பூத்தது; வெண்மை நிறமாக அன்று; அன்ன மாகப் பூத்தது. . செருந்தி பூத்தது; மஞ்சள் நிறமாக அன்று; பொன்னோ என மருட்டியது. கழிமுள்ளிபூத்தது; நீலமாக.அன்று: ஒளி மணியைக்கழற்றியது. புன்னை பூத்தது; வெண்மையாகவா? முத்தைப் பரப்பியது. 1T3 இது நத்தத்தனார் பார்வை மகிழ்ச்சியால் முகம் மலர்ந்தால் செந்தாமரை நிறம். கவலை யால் கருகினால் கருங்குவளை நிறம். செவ்வரி படர்ந்த கண்ணிற்குச் சேதாம்பல் நிறம். உடலின் பொன்னிறப் பொலி விற்குக் கோங்க மலர் நிறம். பிரிவுத் துயரால் படர்ந்த மாமைக்குப் பீர்க்கம்பூ நிறம். இவ்வாறு உறுப்புகளும் உணர்வுகளும் கூட எனது நிறங்கொண்டே விளங்கும். இவற்றால் எனக்கு "வண்ணத்துய்ம்மலர்' , 'வண்ண ாமலர்' நன்னிறமலர்' , ' நிற மலர்' என்னும் பட்டங்கள் t/)fTL0 Дb ற , l- % உண்டு. எனவே, நான் வண்ணங்களின் கிண்ணம்; வண்ணமோ எனது சின்னம்; நானோ உலக வண்ணங்களின் சின்னம். எனது குணங்கள் பத்தில் பிற குணங்களும் இவை போன்றே விரிவாகக் கூறத்தக்கனவே. அவற்றையும் விரிவாக்கி எனது வரலாற்றைக் கேட்கும் உங்களது உணர்வு சலிப்படிக்க வைக்க விரும்பவில்லை. எனது குணங்கள் யாவற்றிற்கும் அடுக்கடுக்காகச் சான்று கூற என் முன்னே பெரும் புலவர்களைக்கொண்ட பேரணி ஒன்றே தெரிகின்றது. அவர்கள் யாவரையும் பேசவைக்க இயலாமைக்குப் பொறுத்தாற்றுமாறு அவர்களது தாள் பணிந்து வேண்டிக்கொண்டு எனது பிற தன்மைகளைப் பேசுகின்றேன். 113 சிறுபாண்: 146 - 149