பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91


- உள்ளங் கவர்ந்தவளை அணைத்த ஒருவன் அவளது உடலின் தண்மைக்கு என்னைக்காட்டி, பொய்கைப் பூவின் நறுந் தண்ணியளே'11 என்றான். குன்றின் பல மலர்களைப் பாவேந்தர், - . "குளிர் மலர், மணியின் குப்பை'120 என்றார். அவர் வாழைப் பூவையும், 'குளிர் வாழைப்பூக் கொப்பூழ் போன்ற'T27 என்பார். நீங்கள் வெறுக்கும் எருக்கம் பூவையும் அப்பர் "நறுந்தண் எருக்கு' 22 என்றார். - பாரதக் கதையில் திருதராட்டிரன் பிறவிக் குருடன். அவன் மலரைக் காணாதவன். கண்ணனுடைய கண்ணை யாவரும், தாமரைக்கண் என்பர். இவன் கண்டானா என்ன? அதனால் கண்ணன் கண்ணைக் குவளைக் கண் என்று பேச வைக்கின்றார் பாரதியார். அவன் என்றோ ஒரு நாளாவது கண்ணனைத் தழுவிய போது அக்கண்களின் குளிர்ச்சியில் பட்டிருப்பான் போலக்கொண்டு பாரதி, - "சீதக் (தண்ணிய) குவளை விழியினான்' என்று பேசவைத்துள்ளார். விழிகளின் அருள் குளிராகின்றது. குளிரி' 24 என்றொரு மலர் குளிராலேயே பெயர் பெற்றது. "எனது உள்ளிட்டுத் தன்மையில் வெப்பம் உண்டு. அவ் வெப்பம் கடுநோயைத் தீர்க்கும். ஆனாலும், அவ்வெப்ப மலரையும் ஒற்றிப் பார்த்த்ால் குளிர்ந்து காட்டும். - நளிர், நளி என்னும் தண்மைப் பொருள் தரும் சொற்களை யும் கூட்டி என்னை இலக்கியங்கள், நளிர் மலர்', ‘நளிமலர்', நளிமுகை தண்போது', 'தாமரைத் தண் தாது 'தண்ணறுங் கழுநீர்', 'தண்டார்’, 'நறுந்தண் மாலையர் -என்றெல்லாம் குளிர்விக்கின்றன. - of 119 ஐங் : 97 120 அழ. சி ; குன்றம் : 2 121 குழந்தைப் பாடல் 122 அப். தே 128 பாஞ், ச : 81 124 குளிரி - நீர்ச்சேம்புப் பூ