பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92


சுவை என்றால் இனிப்பும், இனிப்பென்றால் 6. சுவைச் தேனும், தேனென்றால் நானும் நினைவில் வரு சுனை வோம். தேன் எனது ஊன் உருக்கிய ஊற்றுக் கண்ணின் சுரப்புநீர். அதன் இனிப்பில்தான் எத்துணை வகை! நீரியமாக ஊறிச் சாறாகும்போது நொய் தான் இனிப்பு. அதற்கு நறை - நறா என்று பெயர். சாறுதடிக் கும் நிலையில் மட்டு - மது' என்று பெயர். இது இனிப்பின் அளவுகோல். சாறு நெய்ப்பு பிடிப்பது கள். இது முற்றிய இனிப்பு. நெய்ப்பாக (எண்ணெய்ப் பசையாக) நிறைவது தேன். இதனால் இது தேன் நெய் தேனெய்'25 எனப்படும். பேராசிரியர் தம் தொல்காப்பிய உரையில் (நூற்பா 382 உரை) 'தேைெய்யினை நாவின் பொறி உணர்ந்தவழி" எனத் ‘தேன் நெய் எனக் குறித்துள்ளார். தேன் மதர்த்த இனிப்பு. வெளியே தொகுக்கப்பட்டு நாட் படாதது தேறல். இது இனிப்பின் முதிர்ப்பு. நாட்பட்ட தேறலில் புளிப்பும் தோன்றும். தேறவில், “தேனுக்கு இன்சுவை நிகழ்ந்த காலத்தே புளிச்சுவை நிகழுமாறு போல'12 -என நச்சினார்க்கினியர் விளக்குவது போன்று இனிப்போடு புளிப்பும் தோன்றும். இக்கலப்புச் சுவையான தேறலில் ஒரு துளியை நாக்கிலிட்டால் தேள் கொட்டிக் கடுப்பது போன்று' -சுர்’ என்று தாக்கும்.

பாம்பு வெகுண்டன்ன தேறல்' - (சிறுபாண் : 237) அரவு வெகுண்டன்ன தேரலொடு'(புறம் 376:14) என்பன போன்று பாம்பு சினந்து தாக்குவது போலக் கடுமையான தாக்குதலாக இத்தேறலின் சுவை இருக்கும். இச்சுவை உடலில் இயற்கைக்கு மாற்றான தினவை உண்டாக்கி நலத்தைக் கலைப்பதால் இச் சுவை இன்னா தரும். ஆகையால்,

125 'தேனெய்யோடு கிழங்கு மாறியோர் மீனெய்யொடு நறவு மறுகவும்'-பொருந் : 214, 215 ‘'தேனெய் போன்றினிய சொல்லால்'-சிவ. சி. 1055 126 சீவ, சி: 2882 உரை, - - 127 "தேட்கருப்பன்ன தாட்படு தேறல்'-புறம் 292 (16