பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
95


'பூவின் அன்ன நலம்' 87-எனப் பாண்டிய மன்னன் அறிவுடைநம்பி, மாதர் அழகை, என் னைக்காட்டிச் சிறப்பித்தான். மகளிர் கண்கள் அழகுபெற்றாலும் அழகை இழந்தாலும், - 'பூக்கவின் கொண்ட புகழ்சால் எழில் உண்கண்' 183 என்றும் “பூ எழில் இழந்த கண்'89 என்றும் நானே அளவுகோல் ஆவேன். இத்தன்மைகளால்தான் என்னைக் குறிக்கும் 'பூ' என்னும் சொல்லுக்கு அழகு என்றே பொருள் 140 அமைத்தனர். அழகைக் குறிக்க எத்துணைச் சொற்கள் உள்ளனவோ அத்துணைச் சொற் களையும் எனக்கு அடைமொழியாக்கியே பேசுவர். - சிறுவாய் மலர்ந்த 'பூவோ பூ பாடலை நினைவு கூர்ந் தால் புளி அம் பூ’, தாழம் பூ ஆவாரம் பூ என எல்லாம் அழகைக் குறிக்கும் அம்' அடைமொழியுடன் திகழ்கின்றன. அத்திப் பூ மட்டும் 'அம் பெறவில்லை. அது வெளியே காட்சிகொடுக்காத குடத்து விளக்கு. அழகு ஒரு தன்மை. அதன் செயல் கவர்ச்சி. 9. கவர்ச்சிக் தன்னைக் காணவைத்து வைத்த கண்ணை জ৫া কেf எடுக்க விடாமல் அழகுவலை போடு வ து கவர்ச்சி.கன்னியரின் கண்களுக்கும் இக்கவர்ச்சி உண்டு. பாரதியார் இதனைக் காந்தங்கள்' என்பார். அக் காந்தமாம் கவர்ச்சியை, மலர் விழிக் காந்தங்கள்'T4T என்று பாட்டெழுதி, அதற்குக் 'காந்தத்திற்குரிய கவர்ச்சித் தொழில் செய்துகொண்டிருக்கும் விழிகள்' என்று உரையும் வகுத்தார். "மலர் கண்டு மையாத்த'- மயங்கிய- நெஞ்சைத் திருவள்ளுவர் காட்டக் கண்டோம். ஆனாய நாயனார் சிவன் சூடிய கொன்றையைக் கண்டு உளம் உருகினாராம். அதனை விளக்கும் போது திரு. வி. க. அவர்கள் 'கார்காலக் கொன்றையின் மலர்ந்த காட்சி பொதுவாக எல்லார் நெஞ்சையும் கவரும் ஆற்றல் வாய்ந்தது' என்றார். SAASAASAASAAAS 187 நற் : 1.5 : 4 140 பிங். தி 3875 188 கலி : 28 : 18 141 பாஞ். ச : 18 : 4 189 கலி : 181 :4 -