பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
97


- இவ்வாறு நூலுக்கு மங்கலந் தந்து மகிழ்கின்றேன். எனது தன்மைகளில் மங்கலம் எனது மணிமுடி. வியப்பு உணர்வில் வெடித்த பூவோ பூ தொடரைக கொண்டு வியப்பிற்குரிய தன்மைகள் பத்தைப் படைத்தேன். கேட்ட நீங்களும் வியப்பு உணர்வைப் பெறலாம். எனது குணங்கள் இவ்வாறிருக்க மாந்தர் குணங்களைக் கருத்திற்கொண்டு எனது குணங்கள் எட்டு என்பர். 1. கொல்லாமை, 2. ஐம்பொறியடக்கல், 3 பொறை, 4. அருள், 5. அறிவு, 8. வாய்மை, 7. தவம், 8. அன்பு என்பவை எனது குணங்கள் எனத்தொகையகரமுதலிகள் காட்டும். நான் அமைந்த ஒர் இடத்தை வைத்தே எனது தன்மைகள் பல விரிக்கப்பட்டது ஒன்றை இங்கே நான் குறித்துக்காட்ட வேண்டும். 'கானிற் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்” (குறள் : 1114) என்றபடி நான் கண்டால் நாணங்கொள்ளுமாறு கண் பெற்றிருந்தாள் ஒரு தலைவி. தலைவன் பிரிவால் கண் வேறு பட்டது. அதனால் அக் கண் என்னைக்கான நாணங்கொண்டதைத் திருவள்ளுவர் "நறுமலர் நாணின கண்'14.4 என்றார். இதற்கு உரை வகுத்தவர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தன்மையைக் காட்டி னர். மலரின் ஒளிக்கு நாணின என்றார்பரிமேலழகர். மணத்திற்கு நாணின என்றார் மனக்குடவர். அழகுக்கு நாணின' என்றனர் பரிப்பெருமாளும் காலிங்கரும். கள் நீருக்கு நாணின' என்றார் பரிதியார். எனக்குரிய தன்மைகள் இவ்வாறெல்லாம் அவரவர் கான இடந்தந்தன. இஃதும் ஒரு வியப்பே. o அப்பாடலில் அடுத்துப் புளியம்பூ' வருகின்றது. தொடர்ந்து தாழை, அத்தி, ஆவிரை உள்ளன. இவ்வமைப்பை என்னினத்தில் உள்ள பலவகை வேறுபாடுகளின் குறிப்பாகக் கொள்ளலாம். அவற்றுள் முதன்மையானது எனது குடும்ப வகை. நான்கு வகைக் குடும்பம், நான் qfurs மரத்தின் கிளையில் பூப்பேன். ஆவிரையில் பல வகை உண்டு. பொன்னாவிரையாகச் செடியின் கிளையில் பூப்பேன். நிலப்பாகல் என்னும் கொடிஆவிரையாகக் கொடியிலும் 144. குறள்: 1231 உரைகள். 米 7