பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
99


நான்கு வருகிறது. யாவற்றாலும் எனது குடும்பம் நான்கென உறுதி செய்யலாம். - ஆனால், இக்குடும்ப வழி, தமிழர் கண்ட நிலப்பாகுபாட்டு வழியாகும். மலையும் காடும் வள நிலமும் நீரும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலென நால்வகையானதன் தொடர்பிலேயே எனது குடும்பப் பகுப்பும் அமைந்ததாகும். குறிஞ்சி நிலமாம் மலையில் தோன்றும் என்னைத் தொகுத்துக் கூறும் குறிஞ்சிப் பாட்டு, - 'மலை பவும் நிலத்தவும் சினையவும் சுனையவும் வண்ண வண்ணத்த மலர்130 -என்று ஒரு நிலத் திலேயே எனது குடும்ப வகைகள் தோன்றுவதைக் காட்டுகின்றது. எனவே, ஒவ்வொரு நிலத்திலும் என் குடும்ப வகைகள் நான் கிலும் தோன்றுவேன். குறிஞ்சித் திணை யின் நிலம் மலை. அதன் உரிப்பொருள் புணர்ச்சி. அப்படியென்றால் மலைவாழ் மக்கள் மட்டுந்தான் புணர்ச்சிக்கு உரியவர்கள்; மற்ற நிலங்களில் புணர்ச்சி நிகழாது என்றோ பொருள்? எல்லா நிலத்திலும் புணர்ச்சி நிகழ்ந்தாலும் முதல் தோற்றம் என்ற வகையில் குறிஞ்சிக்கு அது சிறப்பா யிற்று. இதுபோன்றே, ஒவ்வொரு நிலத்திற்கும் எனது குடும்ப வகை ஒவ்வொரு தோற்றமாகக் கொள்ளத்தக்கதாகும். கோட்டுப் பூ சூடினும் காயும்’ என்னும் குறளுக்கு, t "செண்பகப்பூ, பாதிரிப்பூ, புன்னைப்பூ சூடினும் குறிஞ்சி நிலத்து நாயகியை வேண்டிச் சூடினர் என்று ஊடினாள்'15 ! -எனப் பரிதியார் விளக்குவது கொண்டும் கோட்டுப் பூ சிறப்பாக மலைநிலப் பூ எனலாம். இதுபோன்றே முல்லை நிலத்திற்குக் கொடிப் பூவும் மருத நிலத்திற்கு நிலப்பூவும், நெய்தல் நிலத்திற்கு நீர்ப்பூவும் சிறப்பாகக் குறிக்கத்தக்கன. - . . . 150. குறி, பா. 118 : 114 151. குறள்: 1818 பரிதியார் உரை: