பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
102


கமழ் மணத்தின் தனிச்சின்னம். உலக மலர், அகத்துறையில் இக் குடும்பத்திற்கு முழு ஆட்சி உண்டு. கொடியார் என்றால் வன்மை யுடையவர். அவருக்குப் பூச்சூட்டி, பூங்கொடியார் ஆக்கினால் மென்மையர் ஆவர். பெண்களைப் பூங்கொடியாகப் பாடாத பாவலன் பெயர் பெறாதவன் ஆவான். குறிஞ்சி நிலப் பெண் னிற்குக் கொடிச்சி 158 என்றொரு பெயர். கொடிப்பூ புறத்துறையில் அடையாளப்பூ. போர்த்துறையில் அடையாளமாக நின்று வெற்றி தந்தது. சுக்கிரீவனும் வாலியும் கட்டிப் புரண்டு கடும் போரிடுகின்றனர். மறைந்து நின்ற இராமனுக்கு "எவன் வாலி எவன் சுக்கிரீவன் என்று அடையாளங் காண முடியவில்லை. சுக்கிரீவனை அணுகச்செய்து,

  • ... ... ... ... உமை வேற்றுமை தெரிந்திலம்

கொடிப் பூ மிலைந்து செல்கென விடுத்தனன்' 15 இது தவறான போக்கு காட்டிக் கொடுத்ததால் என்னினத்திற்கு ஒர் இழுக்குதான். இப்படியும் எம்மைப் பயன்கொள்வார் வெற்றிபெற்று நல்லவராகப் ப்ோற்றப்படுகின்றனர். நான்காவது நிலக் குடும்பம் அருமருந்துக் குடும்பம், தரை யில் படரும் புல் பூண்டு, குற்றாய் வளரும். சிறு செடி, கிளைகளின் அல்லாது கொப்பே காம்பாய்ப் பூப்பது நிலக்குடும்பம். இது 'புதர்ப்பூ எனவும் படும். புதர்ப்பூ உள்ளிரம் கொண்டது. நீர் வற்றிய பருவங்களிலும் வயல்களில் நிறையும். நாட்டில்மழை பொய்த்துக் கடும்வெப்பம் தோன்றுவதற்குரிய கடுமை தோன்றும் போதும், 'வயலகம் நிறையப் புதர்ப்பூ பூப்பது' 60 - செங்கோ லரசனது சிறப்பிற்கு எடுத்துக் காட்டாகும். தும்பை, நெருஞ்சி முதலியன நிலக் குடும்பத்தன. இவ்வாறு நான்கு குடும்ப வகையை அறிமுகம் செய்ய வழி தந்த சிறுவாய்ப்பாடலில் அடுத்துப் 'பொன்னாங் கண்ணிக்கு: என்னும் தொடர் உள்ளது.அது கொண்டு இரண்டு கருத்துகள் வெளிவரும். முதலில் கண்ணி என்னும் சொல்வழி சூடிக்கொள்ள நான் உருப்பெறும் கலைவாழ்வைச் சொல்வேன். 158 "குன்றகத் ததுவே கொழுமிளைச் சிறு ர் சிறு ரேளே நாறுமயிர்க் கொடிச்சி அகம் 95 :7, 8. 159 கம்ப , வாலிவதை; 52 160 புறம் : 1.17