பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
103


அணியாகும் அரும் வாழ்வு. கண்ணி என்றால் என்னால் ஆகிய தலைமாலை. இச் சொல் அமைப்பு மாந்தர் என்னைப் பயன்கொள்ளுவதன் அறிகுறி யாக அப்பாடலில் அமைந்துள்ளது. - எனது பிறவிச் செயல் இனப்பெருக்கம், ஆனால், எனது வாழ்வுப் பயன் உயிரினங்களை உவப்பித்தல். சிறப்பாக மாந்தரை மகிழ்வித்தல். மாந்தர் எனது அழகால் மகிழ்கின்றனர். என்னைக் கொண்டு அழகுபடுத்திக்கொண்டு அகமிக மகிழ்கின்றனர். சூடிச் செழிக்கின்றனர்; சூட்டிச் சிறக்கின்றனர். என்னைப் பயன்படுத்தி வாழ்வைச் சுவைப்பதில் உலகில் தமிழ்ப்பெருமக்களுக்கு ஈடான இனம் இருந்ததில்லை. தற்காலம்பற்றி இதை என் மனநிறைவோடு சொல்ல இயலவில்லை. தனிப் பூவாக என்னைச் சூடுவர். இணைத்தும் பிணைத்தும் அடுக்கியும் தொடுத்தும் அணிவர் அணிவிப்பர். மகளிர் நீராடியபின் ஒரிரு பூக்களைக் கூந்தலில் செருகுவர்; பெய்வர். கண்ணகியை நீராட்டித் 'தேமென் கூந்தலில் சின்மலர் பெய்"யுமாறு 161 கவுந்தியடிகள் மாதரியிடம் குறித்தார் அன்றோ? ஆடவர் நீராடி அரும்பில்தொடுத்த மாலை அணிந்து மகிழ்வர். அது மலர அதனால் தண்மை பெறுவர் மணம் ஏற்றிக்கொள்வர். பொன் நிறமாக உதிரும் தாதால் உடல் மெருகு பெறுவர். என்னைக்கொண்டு உருவாக்கும் வகைகள் எத்துணை! ಕTäg 5ತಾ ಕ್ಲಿಕT! அதற்கென என்னைக்கொய்ய, ஆய்ந்தெடுக்க, அடுக்க, தொடுக்க ஒரு கல்வியே இருந்தது. மணிமேகலை இக்கலையில் தேர்ந்தாள் என்பதை அறிந்திர்கள். மென்மையான என்னைப் பலவாறாக உருவாக்கும் தொழில் மென்மைவாய்ந்த மகளிர்க்குரிய கலையாக இருந்தது. எண்ணல், எழுதல், இலைகிள்ளல், பூத்தொடுத்தல்" என்று பழம்பாடல் ஒன்று மகளிரது கலைக் கல்வியைக் காட்டுகின்றது. பூக்கொய்தல் மகளிர்க்கு ஒரு துறை. 192 இறையடியாராக ஆடவரும் பூக்கொய்வர். கொய்த வற்றைத் தொடுக்க அரண்மனைகளிலும் செல்வர் வளமனைகளி லும் கோவில்களிலும் 'மலர் மண்டபங்கள் இருந்தன. . . :113 : சிலம்பு : அடைக்கலம் 181 --مببمب--ب۔-w-w 162 பூக்கொய் மகளிரின் -குறு 26 8.1