பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109


பணிபடு நறுந்தார் குழைகிய இம்மொடு துணிநீர் முயக்கம் பெற்றோள் போல் உவக்குநன்’- 184 -எனத் தழுவுவதால் தன் மார்புத் தார் குழைந்ததைப் பேசிப் பூரித்தான். சோழன் நலங்கிள்ளி வஞ்சினம் கூறுபவன்' பல்லிருங் கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைக என் தாரே'85 -என்றான். ஒரு ஊர் சுற்றித் தலைவன் ஒரு பரத்தையுடன் நீர் விளை யாட்டில் குலவினான். குலவிய தழுவலில் இவன் தார் அவள் கழுத்திற்கு ஏறியது. அவள் தலைக் கோதை மாலை இவன் கழுத்தில் சுற்றிக்கொண்டது. இந்த மயக்கம் கலையாமல் தன் இல்லத்திற்கு வந்து மாட்டிக்கொண்டான். வீட்டுக்காரி, 'தார்கொண்டாள், தலைக் கோதை தடுமாறிப் புனைத் நின் நிாணி சிதையாது என் இல் வந்து நின்றதை’18 6 - என்று சாடினாள். ஆடவன் தாரில் படிந்த வண்டு மகளிர் கூந்தலில் மொய்த்தாலே அது புணர்ச்சி போன்று பழியாயிற்று. நீரோட்டத் தில் அவன் தார் இவள் கோதையிலும் இவள் கோதை அவன் மார்பிலும் அமைய புணர்ச்சி நேர்ந்ததாக மொத்துப்பட்ட தலைவனும் இருந்தான், கடவுளர்பாலும் தார் புணர்ச்சியணி யாக்கப்பட்டது முருகன் உருள்பூந் தண் தார்புரளும் மார்பினன்' (திரு முருகாற்றுப்படை: (1) இத்தார் எதற்குரியதாம்? 'இது போகத்திற் குரிய தார்-என்றார் நச்சினார்க்கினியர். இலக்கியங்கள் இவற்றைப் பன்னிப் பன்னிப் பேசுகின்றன. தார் வரும் இடமெல்லாம் மார்பு வருவதும், அத்துடன் கோதை வந்தால் புணர்ச்சிக் குறிப்பு இருப்பதும் இலக்கிய வழக்கு ஆயிற்று. இவ் வளவில் பரவலான இடம் தாருக்கு உண்டு. என்னால் ஆகும் அணி தலை, மார்பு, தோள் மட்டுமன்று இடுப்பிலும் இடம்பெறும், வேங்கைப் பூமாலை மகளிர் அடிவயிற்று இடையில் அணியப்பட்டது. இவ்வாறு பலவகை அணிகளை உருவாக்க என்னைக் கொய்து வகை பிரிப்பர். கட்டுப் பூ” என்றும் தொடைப் பூ" 184 அகம் : 144 : g, 10: 188 கலி : 88 :15, 185 புறம் : 78 : 14 .