பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110


என்றும் விடு 'பூ' என்றும் என்னை வகைப் படுத்துவர். கட்டப் படும் மாலை வகைக்குக் கட்டுப் பூ. தொடுக்கப்படும் தொடை யல் முதலியவற்றிற்குத் தொடைப் பூ. கட்டித் தொடுத்து முடித்ததும் நிறைவேற்றுவதற்கும் செருகுவதற்கும் தூவுவதற்கும் உரிய சிறுபூக்கள் விடு பூக்கள். 187 கோப்பதற்கு உரிய உள் துளை தெரியும் நான் 'உளைப் பூ" எனப்பட்டேன். மாறுபட்ட வண்ண அமைப்புக்காக எதிர்ப் பூக்கள் தொகுக்கப்படும். பலவகையாகத்தொடுக்கும்போதோ, கட்டும்போதோ எனது காம்பைக் கிள்ளிவிடுவதும் உண்டு காம்புடன் கட்டுவதும் உண்டு; "குறையிதழ் பறியா கிளை யிதழ் பறியா' (பறித்து) மாலை கட்டினதைக் குறிஞ்சிப்பாட்டு காட்டும். புறஇதழ்களைப் பெரும் பாலும் நீக்கிவிட்டே தொடுப்பர். தனி இதழ்களாகக் கிள்ளிக் கட்டப்படுவதும் முழு மலராகத் தொடுக்கப்படுவதும் உண்டு’ முழுமலர் புறவிதழ் கிள்ளப்பட்டோ, புறவிதழுடனோ கட்டப் பயன்படுவது முழு நெறி' எனப்பட்டது. 'பூத்த குவளைக் கூம்பு அவிழ் முழுநெறி'89 என்றதற்கு "செங்கழுநீரினது முகையவிழ்ந்த புறவிதழ் ஒடித்த முழுப் பூவாற் செய்யப்பட்ட' என்று உரைகாரர் விளக்கந் தந்துள்ளார். முழுநெறிக்குவளை’ 190 என்னும் சிலம்புத் தொடருக்கு அடியாருக்கு நல்லார் "இதழ் ஒடிக்கப்படாத குவளை' என்றார். இவை புறவிதழ் இன்றியும், புறவிதழுடனும் கட்டப் பட்டதைக் காட்டுகின்றன. என்னை இவ்வகைகளில்,பயன்கொள்ளச் செய்யும் கலைக்குத் தனி நூல்களும் இருந்தன. மகளிர்க்கே இக்கலை உரியது என்றாலும் ஆடவரும் இக்கலை அறிந்தவராக இருக்க வேண்டியிருந்தது. தனது காதலியின் உள்ளமறியத் தான் ஒரு காணிக்கைபோன்று தழையாலோ, என்னாலோ உடையோ மாலையோ புனைந்து வழங்கும் நிலை உண்டு. அதற்கென அழகிய 187 "வெட்சியுடைய சிறிய பூக்களை விடுபூவாகத் தூவி திருமுருகு : 21 . 載。6km) f 188 குறி. ப. 101 190 சிலம்பு 2 : 14 உரை 189 புறம் : 118 : 1, 2, - : *. -