பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/147

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
111


முறையில் என்னைக் கொத்தாகவோ மாலையாகவோ கட்டும் கலை தெரிந்தவராக ஆடவர் இருந்தனர். சீவகன் இக்கலையில் வல்லவனாயிருந்தானாம். பலவண்ண மலர்களையும் கொண்டு, "நன்மை நூலின் நயந்தோன்ற நன்பொன் விரலின் துதியினால் பன்மணியும் முத்தும் பவளமும் பைம் பொன் னும்கோத் தாலொப்ப என்ன அமரரும் மருளத் தொடுத்தரன் இனமாலையே'191 என்னால் அணியும் மாலைவகை மட்டுமன்றி விளையாட்டிற் குரிய பந்தும், இல்லத்தின் ஒப்பனைக்குரிய கொத்துகளும், மனை யின் நுழைவாயிலில் தொங்கலும் பயன்பட்டன. இம்மாலை வகைகளைக் கட்டவும் தொடுக்கவும் பலவகை நார்கள் கொள்ளப்பட்டன. எளிதிற் கிடைக்கும் வாழை நார் பொதுவில் கொள்ளப் பட்டது. 'ஆர்' என்னும் ஆத்தியின் பட்டையை உரித்துக் கிழித்த நாரிலும் கட்டினர். மரல் என்னும் அரலையின் நார் கொண்டும் கட்டினர். நரைக்கொடிகளை அப்படியே கொடியாகவும் நாராக்கி யும் பயன்படுத்தினர். இந்நார் வேங்கைப் பூவைத் தொடுக்கப் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்பட்டது. 192 மாலைகள் நாரினால் கட்டப்பட்டன என்பது அடிப்பட்ட பழக்கம். அதனால், மலர் மாலை அல்லாத மாலைப் பொழுதைக் குறிக்க 'நள் என வந்த நார் இல் மாலை (குறு 118 - என்று கட்டப்பட்டது. இவ்வாறு என்னைக்கொண்டு கண்ணி முதல் பலவகை உருவாயின. பொன் ஆம் கண்ணிக்கு’ என்று தலைமாலையைத் காட்டிய இப்பாட்டின் சொல்கொண்டு இத்துணை வகைகளைக் கூறவழி கிடைத்தது. - 191 சீவ , சி , 1852, 192 நார்ச் செறியத் தொடுத்த கண்ணி ' - புறம் : 81 , ஆர் நார் உரிவையின் * . - - - - - - செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி' அகம் : 269. , 'காமர் கண்ணி திரங்கு மரல் தாரில்பொலியச் சூடி'-மலை. 480,431 . "தறை நார்வேங்கைக் கண்ணி அக: 282 :19, 10