பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112


இக்கண்ணியுடன் பொன் அடைமொழியாக உள்ளது. இதைக் கொண்டு அறிவிக்கப்பட வேண்டிய கருத்துகள் பல உள்ளன. பூக்காத பூக்கள் பாடும் பாணர்க்கும் புலவர்க்கும் பரிசாக என்னுருவில் செய்யப்பட்ட கலைப்பொருள்கள் வழங்கப்பட்டன. இவை தாமரை வடிவிலும் எட்டிப் பூ, காவிதிப்பூ வடிவிலும் உருவாயின. போரில் வெற்றி தந்த மறவர்க்கு வெற்றி விழாப் பெருநாளில் பொன்னால் வாகைப் பூசெய்து, "போர் வாள் மறவரை வருக தாம் என வாகைப் பொலம் தோடு பெருநாள் அமைபம் பிறக்கிடக் கொடு' க்கப்பட்டது (சிலம்பு நீர் : 42, 44.) எனது தாமரை வடிவம் பொன்னால் நெருப்பில் உருக்கிச் செய்யப்படுவதால் 'அழல் புரிந்த தாமரை” (புறம் : 1) என்றும், அது இதழ்கள் அமைப்பில் இல்லாமையால் "ஏடு இல் தாமரை' (பொருந் :158) என்றும், வண்டுகள் மொய்க்காமையால் 'வண்டு இமிராத் தாமரை” (புறம்: 69) என்றும், வாடாது இருப்பதால் 'வாடாத் தாமரை (புறம் 126) என்றும் குறிக்கப்பட்டன. "பொன்மலர் நாற்றம் உடைத்து"198 என்பது கொண்டு என்னைப் பொன்னால் செய்வதை அறிவதோடு, என்னதான் பொன்னால் ஆனாலும் மனம் இல்லாத குறையும் சொல்லாமல் சொல்லப்பட்டிருப்பதை உணரலாம். தாமரையைப் போன்று குவளை முதலிய பிற பூக்களும் பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்படும். இவ்வாறு செய்யப் படுபவை . - 'அழல் புரிந்த அடர் தாமரை - ஐது அடர்ந்த நூல் (பொன் நூல்) பெய்து புனைவினை பொலித்த பொலன் நறுந் தெரியல்'194 எனப் பொன் நாரால் தொடுக்கப்பட்டது. இக்காலத்துப் பொன் 198 கி. தெ 4 194. புறம்:29,