பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113


ரடுபோன்றது இது. வெள்ளிப் பூக்கள் வெள்ளி ாரால் தொடுக்கப்பட்டு வழங்கப்பட்டன. இதனைப் பெற்ற லவரும் பாடினியுமாகிய பேய் மகள் இளவெயினி 'வெள்ளி நாரால் பூப் பெற்றி சினே' என்று பாடினார். புறத்திணையுள் போர் நிகழ்ச்சிகளின்போது அவ்வவ்வற்றிற்குரிய சின்னப்பூக்கள் பலவகை உலோகத்தாலும் துணிமுதலியவற்றாலும் செய்து சூட்டப்பட்டன. கலைப் பொருள்களாக வும் உருவாயின இவ்வாறு கலைப்பொருள்கள் விற்பனைக் களத்திற்கு வந்ததைச் சிலப்பதிகாரம், "கிழி (துணி)யினும் கிடையினும் (நெட்டியினாலும்) தொழில் பல இயற்றி'196 -என அறிவிக்கின்றது. இது போன்று கலைப்பொருள்கள் தோலாலும் கோரைகளாலும் மடல் களாலும் தாளாலும் மிக நுண்ணிய முறையில் செய்யப்பட்டு மக்களால் விரும்பி விட்டின் ஒப்பனைப் பொருள்களாகக் கொள்ளப் பட்டன. இவைகளெல்லாம் பார்வைக்குரிய கலைப் பொருள்கள்; அணிவதற்கு அல்ல, அணிவதற்கு நான் வெள்ளம்போல் பரவியிருப்பதை உள்ளம் நிறைந்த பழந்தமிழ்ப் பெருமக்கள் உணர்ந்தனர். கொய்துகொய்தும், பெய்து பெய்தும், தொடுத்துத் தொடுத்துச் சூடி அணிந்தும் வாழ்விற் கமழ்ந்தனர். - இக்காலத்தைப் பார்க்கின்றேன் அந்தகோ தமிழரே அவலத்திற்கு உரியோரே என்று கூற வேண்டியுள்ளது. மலர் என்றால் மனம் பறிகொடுத்த மகளிரே என்னை மறந்து வரு கின்றனர். தேனிருக்கும் நானிருக்கச் செய்மலராம் பொய் மலரைச் சூடி மினுக்குவதை என்னவென்று சொல்வேன்! நான் சொல்வ தென்ன! 'இயற்கை உனக்களித்த மணமலர் இருக்கையிலே ஏனிந்தக் காகிதப்பூ மகளே' 191 -என்று பாவேந்தர் - கவன்று பாடுகின்றாரே! என்னை விட்டு விலகியது மட்டுமன்று, -- 195 புறக் 11 : 18 - 197 குயில் : காகிதப்பூ , 1-4 198 சிலம்பு : நீர்ப்படை : 88, - --