பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115


தாழ்வாக்குவது. அதில் என் தாழையைப் பொய்ச்சான்றுக்கு இழுத்தது முழுப்பொய். . இந்தக் கதை எக்காலத்தில் வழக்கிற்கு வந்ததோ? சங்க காலத்தில் ஆடவர்-அவரிலும் நெய்தல் நிலத்தவர் தாழம்பூவைச் குடி மகிழ்ந்தனர். நிறைமதி நாளில் பரதவர் கடலில் செல்லார், மகளிருடன் குலவி மகிழ்வர். மகளிர் வெண்கூதாள மலர்சூடிக்கொள்ள, "புன்தவை இரும் பரதவர் பைந்தழைமா மகளிரொடு, மடல் தாழை மலர் மலைந்து' 19 மேகிழ்ந்ததைப் பட்டினப் பாலை காட்டுகின்றது. இது கதையன்று. 'சிறுவாய்ப் பாடலில் உள்ள மலர்களில் சில வேற்றுமை கள் உள்ளன. அவற்றில் ஒன்றை இங்குக் காட்டவேண்டும். புளியம் பூ வின் புல்வி, அல்லி இதழ் எனப்படும். ஆவிரையும் அத்தகையதே. அத்தி வேறு வகையில் காணத்தக்கது. தாழையின் பு: லி, அல்லி மடல்’ எனப்படும். இது கொண்டு எனது ஒர் உறுப்பாம் இதழில் எத்துணை வேறுபாடு உண்டு; எத்துணை பெயர்மாற்றம் உண்டு என்பதைக் கூற இவ்வமைப்பு இடம் தருகின்றது. - இதழ், அதழ், தோடு, ஏடு, மடல், தளம், - பாளை-என ஏழு பெயர்கள் இவ்வுறுப்பிற்கு உள. எனது உறுப்புகளில் என்னைக் காட்சிப்படுத்துவது இதழே. பளிச்சிடும் வண்ணம், வடிவம், மென்மை, மணம், கவர்ச்சி, எழில் யாவற்றாலும் இது தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது. இதற்கமைந்த பெயர்கள், தொல்காப்பியம் நிகண்டுகளில்உள்ளன. அவற்றைக் கூர்ந்து நோக்கினால் பின்வரும் வேறுபாடுகள் புலப்படும். - . ~ ,98 91 ,90 :مون بنانا 498