பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118


அத்தி விடை தருகின்றது. 'அத்திக்குப் பூ உண்டு: என்பதை முன் சொன்ன பழமொழியே காட்டுகின்றது. அப்பூ வெளியே காட்சி இல்லாமல் புற இதழ் விரியாத மஞ்சள் நிறக் குடம்போன்ற பகுதிக்குள் நுண்ணிதாகப் பூக்கும். இது குடத்து விளக்கு வெளிச்சம் வெளிவராது. இக்கால அறிவியலிலும் இது காணப்பட்டுள்ளது. அத்திப் பழத்தையும் ஆலம் பழத்தையும் ஒத்துப்பார்த்தால் இரண்டும் அமைப்பாலும் விதையின் நுண்மை யாலும் பெருக்கத்தாலும் ஒன்று போன்றவை. எனவே, அத்திக்குப் பூ உண்டென்றால் ஆலத்திற்கும் உண்டு. பின் ஏன் அத்திக்கு உள்ளே தெரிவதுபோன்று ஆலத்தில் தெரிவதில்லை? இங்குதான் தமிழ்ச்சொல்லின் ஆழம் புதிரை அவிழ்க்கின்றது. பூத்தல் ஒரு செயல். இதழ்கள் கட்டுவிட்டு மலர்ந்து காட்சியளித்தல்தான் பூத்தல். இச்செயல் அத்தியில் புற இதழ் விரியாமல் உள் அகவிதழும் விரிந்து கொடுக்காமல் நனையாகத் தோன்றிய நிலையிலேயே வளர்ந்து விடுகின்றது. இதனின் சிறிது வேறுபாடாக ஆலத்தில் இதழ்களோ வெளிவராமல் உள்ளமைப்பாக நின்றுவிடுகின்றன. பிஞ்சு தோன்றுவதற்கு முன் அதன் குடத்தின் முனை மையம் சிறு துளையாக நெக்குவிடு கின்றது. இதன் வழி கரு ஏற்றம் நிகழ்கின்றது. இதுபோன்றே கொழிஞ்சி, பலா இரண்டின் பிஞ்சுகளிலும் அமைகின்றது. இவ்வாறு, இவற்றிற்கு உள்ளேயே நான் அமைகின்றேன். வெளித் தோற்றங் கொள்ளேன். இந்த உண்மையை ஒரு நாட்டுப்புறத் தாய் தன் பாட்டில் காட்டுகின்றாள்: குழந்தை தேம்பி அழுகின்றது. தேம்பல் உள்ளேயே செருமுகின்றது. அழும் குறி முகத்தில் தெரிகின்றது. கண்ணில் நீர் வரவில்லை. முளைக்கும்போதே முக்காட்டு அழுகை. குழந்தை வாய் விட்டு அழவேண்டும். இது நல்ல உடல்நலக் குழந்தைக்கு ஒர் அறிகுறியும் ஆகும். இக்குழந்தையோ உள்ளுக்குள்ளேயே வெம்புகின்றது. தாய் பார்த்தாள். கண்ணே! இப்படி அழக் கூடாது. பூட்டகமாக உள்ளுக்குள்ளே தேம்பாதே' என்கின்றாள். அதனை, 'ஆலம் பூப்போலே-கண்ணே நீ அத்திப் பூப்போலே - தேம்பி அழுகாதே-கண்ணே நீ திட்டாதே வையாதே.” -என்று. வெளி யே தே ான்றாமல்