பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121


பாகவே அமைந்த எனது காட்சி மேற்சொன்னவாறு கோதை போன்றும், கண்ணி, மாலை முதலியன போன்றும் தோற்றமாகும். பிடவத்தில் நான் இவ்வாறு மலர்ந்திருப்பதை மருதன் இளநாகனார் பார்த்துச் சுவைத்தார். கண்ணியாகக் கட்டியது போன்று இருந்த இயற்கை அமைப்பு அவரது உள்ளத்தைக் கவர்ந்தது. . 'சிறுகரும் பிடவின் வெண்டலைக் குறும்புதல் கண்ணியின் மலரும்'215 -என்று பாடினார். காஞ்சி மரத்தில் சற்றுப் பெரிதாக மலர்வேன். இக்காட்சி சிறிதளவு திரட்சி உடையது. புலவர் நத்தத்தனார், இது பெண் கள் தலைக்குச் சூடும் கோதை போல் உள்ளதைக் கண்டு, "தறும்புல் கோதை தொடுத்த நாட்சினை குறுங்காற் காஞ்சி” யாகக் கண்டு மகிழ்ந்தார். பக்கத்தில் நிற்பவர் போன்று மூலங்கிழார், 'குறுங்காற் காஞ்சிக் கோதை மெல்லினர்'217 -என்று வழிமொழிகின்றார். மேலும் வழிமொழிவோர் பலர். கடம்பில் நான் அமையும் அமைப்பு கோதையாகவும் அமையும் வளமான மரத்தில் நான் அமைவது மாலை போன்றதாகும். திணி நிலைக் கடம்பின் திரள் அரை வளை இய துணை அமை மாலை'218 என்பது கபிலர் கண்ட காட்சியின் பாட்டு: ஆம் ஆம். 'கடம்பு சூடிய கண்ணி மாலை இரல:319 த்தான் உளது என்கின்றார் திருத்தக்க தேவர். கடம்பின் துணை ஆர் கோதை (சிறுபாண் : 69) கோதை போலப் பூத்தலின் கோதை என்றார்” என்று நச்சினார்க்கினியர் காட்டினார். கடம்புடன் கொன்றையும் இவ் வாறு அமையும். அதனால் இதற்குச் சரக்கொன்றை என்று 215 அகம் : 34 218 குறி. பா: 176, 1τ7 - 216 சிறுபாண்: 178, 179 219 சில். சி. 9.90. 217 அகம் : 841 - - -