பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122


பெயர். செய்யுளில் எதுகை மோனை அமைப்பில் செந்தொடை" என்பது ஒன்று. இப்பெயரே 'தொடை என்ற அமைப்பில் தொடுக்கப்படும் தொடையலுடன் தொடர்புகொண்டது. இத் தொடர்பை விளக்கும் உரையாளர் பேராசிரியர், "செந்தொடையும் செய்யுட்பொலிவு செய்யுங்கால் கொன்றையும் கடம்பும் போல (செடியிலும் மரத்திலும்) நின்றவாறே தொடைப் பொலிவு கொள்ளும் என்பதாம் 27 - -எனக்காட்டினார். கொன்றையில் நான் இவ்வாறு வரிசையாக மாலைபோன்று பூத்துத் தொங்குவதை மேலை நாட்டாரும் பார்த்துச் சுவைத்தனர். இதனால் என்னை "இந்தியன் லேபர் நம்'221 என்றனர். ஆங்கிலத்தில் லேபர் நம்' என்றால் பொன்மாலை என்று பொருள். கொன்றையில் மட்டுமன்று. அதைவிடச் சற்றுப் பெரிதாக வேங்கையில் மாலையாகக் காட்சி தருவேன். மாணிக்கவாசகர் கண்டு களித்து, மொய்யார் வளரிள வேங்கை பொன்மாலையின் முன்னினவே” என்று கோவை தில் கோத்தார். பொன்னிறமான மஞ்சள் நிறத்தில் நான் வேங்கையில் தோன்றுவதைத் திருத்தக்கதேவர் அகல விரித்துப் பார்த்தார். எனது மஞ்சள் நிற வரிசைக்கு இருபுறமும் பசுமை இலைகள் தோன்றுவதால் அவரது கண்களுக்குப் பச்சைக் கயிற்றில் பொன்னால் ஆன தாலி வரிசை கோத்தது போன்று காட்சி தந்தேன். இவ்வாறு நான் பிறவியிலேயே மாலையாகி என்னைப் பெற்ற செடிகட்கும் கொடிகட்கும் மரத்திற்கும் மாலை சூட்டி நன்றி படைக்கின்றேன். உங்கள் கண்களுக்கும் செய்யுள்களுக்கும் மாலை அணிவிக்கின்றேன். - 220 தொல் : செய் , 94 பேராசிரியர் உரை 221 Εmcyclopaedia of Britanica Vo1 : 13 : Page 566, 22 திருக்கோ, 262. - - - -