பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
123


வடிவப் பெயர்கள் தற்காலத்து அறிவியலில் எனது வடிவங்கள் பெயரிடப் பட்டுள்ளன. ஊமத்தை, அடம்பு போன்றவை ஒரிதழாக அடியிலி ருந்து குழாய் போன்று வந்து மேலே விரிந்து காட்சியளிக்கும், புனல் போன்ற தோற்றம் உடைமையால் புனல் வடிவம் என்று உவமத் தொகையாகப் பெயரிடப்பட்டேன். இதுபோன்றே குழாய் வடிவம், நாக்கு வடிவம், பை வடிவம், வளர்ச்சி முடி வடிவம், ஈருதட்டு வடிவம், வண்ணத்தி வடிவம், முறுக்கிய வடிவம், பொய்ம்முக வடிவம் என்றெல்லாம் பெயர் கொடுக்கப்பட்டுள்ளேன். தமிழ்ச் சான்றோர், முற்காலத்துக் கோடிட்டுக் காட்டிய வையே இப்பெயர்கள். இப்பெயர்கள் இவ்வுருவில் இல்லை. ஆயினும், உவமை முகமாக இவ்வடிவப் பெயர்களை இலக்கியங்கள் காட்டுகின்றன. இது விரிவானது. சான்றிற்குச் சில காட்டுவேன்: குடை வடிவம் : கோங்கம் பூ: ' புல்விதழ்க் கோங்கின் மெல்லி தழ்க் குடைப்பூ' (நற் : 48) பொரி வடிவம்: புன்கம் பூ பொரி உரு உறழப் புன்கு பூ உதிர" (கலி ; 33 : 1) பொரிவடிவம் : புன்னைப்பூ : 'பல்லி நெரித்த சினைபோலும் - நீளிரும் புன்னைப் பொரிப்பூ" (பழ : 1-3.) விரல் வடிவம் : காந்தட்பூ : 'காந்தன் முகை புரைவிரல்' (புற 144: 9.) நக வடிவம் : முருக்கம் பூ , 'குவிமுகை முருக்கின் கூர்துணை வையெயிற்று நகைமுகை மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும்’ (ஊட்டு உகிர் : வண்ணம் ஊட்டிய நகம்{-அகம் :317) பந்து - * * - 曾 - • வடிவம் ! வெண்கடப்பம் வெண்கடம்பு பந்தணிந்தனவே: பூ : (சீவ. சி. 1650) . . *