பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124


வடிவம் ! வெண் 'உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள் : காந்தள்’ (புறம் : 90) சுரி வடிவம் : மராம் பூ : 'வலம்புரி மராஅத்துச் சுரம் கமழ் புதுவி (அகம் : 83) தேர் உருளை 'தேர்க்கால் மலர்ந்தன வகுளம் வடிவம் : மகிழம் பூ (மகிழம்பூ) (சீவ. சி : 1850) இவைபோன்ற பல வடிவமைப்புகளைக் கண்டு குறித்தனர் பழஞ்சான்றோர். இக்கலையை வளர்க்காது விடுத்த தமிழரை என்னென்று கூறுவேன்! எண்ணி எண்ணி வாடி வீழ்ந்து சருகு ஆகின்றேன். ஒருநாள் நிறை வாழ்வு எனக்கு நாள்மலர் என்றொரு சிறப்பு உண்டு இந்த நாள் என்னும் சொல் காலைப்பொழுதைக் குறிக்கும்போது காலையில் மலர்வேன் என்னும் பொருள் தரும். புதுமையைக் குறிக்கும்போது புது மலர்ச்சி நிலையைக் குறிக்கும். உள்ளிடான குறிப்புப் பொருள் ஒன்று கூறுவேன். அஃது ஒரு நாள் வாழ்வு என்பது. எனது வாழ்வை, காலை பிறந்து பகலில் வளர்ந்துபின் மாலை மறையும் மலர் என்று புதுக்குறள் படைத்துக் காட்டலாம் சில இனங்களில் சிறப்பாக நீர் வாழ் இனங்களில் நான் சில நாள்கள் வாழ்வு பெரினும் பெருமளவில் என்வாழ்வு ஒரு நாள் வாழ்வே. "மாந்தன் காட்டிலுள்ள பூவைப்போல் பூக்கிறான். அதன்மேல் ஒரு காற்றுடித்தால் அது அழிந்துவிடும். அது இருந்த இடமும் இனி அதை அறியாது” ?.28 ಈಿ : “ಸುಸಜ : 108 : 15, 16