பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
125


-என்றெல்லாம் நிலையாமைக்கு எடுத்துக்காட்டாகக் கூறப் படலாம்; நிலையாத வாழ்வாகலாம். ஆனால், நிறையாத வாழ்வு அன்று. ஏனெனில் தன்னல வாழ்வன்று; பிறர் நல வாழ்வு. எழிலான காட்சி வழங்கி, மணம் ஏற்றி, தேன் ஊட்டி வரவேற்கும் வாழ்வு. சூடவும் சூட்டவும், அணியவும் கணியவும் ஆட்படும் அருமை வாழ்வு. புலவர்கள் பாட்டில் அமைந்து புகழ் நாட்டும் பெருவாழ்வு. இவற்றால் நிறை வாழ்வு கொண்ட வாழ்வு எனது வாழவு. - 'போகாதா என்று பொருமாமல், 'போகாதே’ என்று போற்றும் வாழ்வு எனது வாழ்வு. ஒரு நாளில் நான் ஒடுங்கி விடுவதை எவரும் விரும்பமாட்டார். ஒரு மேல் நாட்டுக் கவிஞர் "எர்ரிக் என்பார். 'மரந்தரு கனிகளின் முன்னறி விப்பே' மலரே! விரைவாய் ஏன்விழ் கின்றாய்? மற்றுண் வாழ்நாள் கழிதற் கன்றே. ஆனால், மேலும் சிலநாள் நின்றே அரிவையர் தானம், முறுவற் கன வாய்த் தருவாய்; பின்னர் பிரிவாய் இனிதாய்’224 -என்று எனது ஒருநாள் வாழ்வை மறுத்துப் பரிந்துரைத்து வேண்டு கின்றார். அனைத்து வகையிலும் அருஞ்சிறப்பில் திகழும் என்னைப் பாடாத இலக்கியம் இல்லை; புலவர் இலர். மோவாத, சூடாத கொடியவரும் இலர். - தமிழ்ப் புலவர் அனைத்து உத்திகளிலும் என்னைப் பாடியுள்ளனர். என்னைப் பாடக் கொண்ட தமிழையே என் உருவகமாக்கினர். சொல் பூம்போதாக, பொருள் தாது ஆகத் தமிழ் என்னும் மல்லிகை மாலை உருவாயிற்று. 224 Fair pledges of the fruitful free Why do you fati so fast? Your date is noi so past But, you may stay yet there awhile To blush and gently smile - And go at last. . . --To BLossoms-HERRsc