பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126


'சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருளென்னும் நல்லிருந் திந்தாது நாறுதலால் - மல்லிகையின் வண்டார் கமழ்தாமம் அன்றே; மலையாத தண்டாரான் கூடல் தமிழ்':25 பாவேந்தரோ, மனிதராம் புதுப்புனல்மீது ، ، ، ... مس ........ "" செந்தா மரைக்காடு பூத்தது போலச் செழித்த என் தமிழே 220 -என்று தமிழின் தோற்றத்தையே என்னுருவில் பாடினார். எனது வரலாற்றை நிறைவு செய்யும் முன் எனது தொன்மையான தலைமுறையைக் குறிக்கவேண்டும். உண்ண்மயில் அது எல்லை கட்ட முடியாது நீள்வது. இப்போதைக்கு என் கொடிவழித் தலைமைக்குக் கிடைத்திருக்கும் சான்று 15 கோடி ஆண்டுகட்கு முந்தியதாகும். பீகார் மாநிலம், இராசமகால் மலைப் பகுதியில் என்னுடன் கூடிய இலை, பட்டையின் படிவங் கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதன் தொன்மை "15 கோடி ஆண்டுகட்கு முந்தியது' என ஆய்வாளர் வரையறுத்துள்ளனர். இப்படிவங்கள் கல்கத்தா இந்தியப் பொருட்காட்சியில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வகையிலும் என் வரலாறு இனியது. இத்தகைய எனது வரலாற்றைக் கேட்ட நீங்கள் என்னைப் பற்றி என்ன சொல்ல எண்ணுகிறீர்களோ? எனக்கு அறிய ஆவல்தான். தமிழ்ப்புலவர்கள் தமிழில் சிறப்பித்துச் சொல்ல அடை மொழிகள் எத்துணை உண்டோ அவற்றையெல்லாம் அடுக்கி அடுக்கிச் சொல்லிவிட்டனர். வண்ணனைகளும் கற்பனைகளும் அளவிற்கு அடங்காதவையாக வடிக்கப்பட்டன. உதகை மலையில் நான் பூத்துக் குலுங்கும் பெரும் பரப்பைப் பாவேந்தர் நின்று கண்டு சொக்கிப்போனார். ஏடெடுத்து எழுதினார். பலவகைப் பூவின் பரப்பெல்லாம் எழுதி, அவையெல்லாம் அழகின் சிறப்பாகக் கண்டு, 225 மது. கா : இறுதிவெண்பா ಸಿರಿ : ೩ಣ್ಣguಆಘ