பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132


இப்படிப் பேச்சுகள் ஒய்ந்து அமைதிப் பேச்சு நடக் கின்றது. இரவெல்லாம் பேசுகின்றனர். ஒரு முடிவிற்கு வந்து விட்டனர். பொழுது புலர்ந்தது. அமைதியாக அடுத்த வீட்டுக் "குட்டி வருகின்றாள். முதிய தாய், என்னேடி! எங்கே? என்கின்றாள், வந்தவள் ஒன்றும் அறியாதவள் போன்று விழிக்கின்றாள். அந்த விழிப்பில் நடிப்பு நெளிகின்றது. "எங்கே அவள்?’-சிறியவன் எங்கோ பார்த்தவாறே வினவுகின்றான். வந்த பாவை அறை, அடுக்களை எல்லாம் தேடு கின்றாள். சொல்லி வைத்தது போன்று அடுத்துள்ள கொல்லைக் காட்டிற்குப் போகின்றாள். அங்கே, இத்துணைக்கும் காரணமான பூம்பாவை ஒரு புதரண்டை ஒடுங்கிக் கிடக்கின்றாள். அச்ச உணர்ச்சி யால் முடங்கிக் கிடக்கின்றாள். வந்த நடிகையோ பொல்லாத கள்ளி. அவள்தான் இத்துணைக்கும் சுக்கான். காதல் துறையில் தோழி அறியாமல் துரும்பும் அசைவ தில்லை. ஒன்றுந் தெரியாதவள்போல் பேச்சுக் கொடுக் கின்றாள். முடங்கி கிடந்தவள் முனகலாகவே : 'நேற்று மால்ை எனது கூந்தலைப் புதுப்பிக்கத் தாய் வெண்ணெய்யும் கையுமாக வந்தாள். எனது பழைய முடியை அவிழ்த்தாள். உடனே நெருப்பைத் தொட்டவள் போன்று கைகளை நெரித்துக் கொண்டு எழுந்து விட்டாள். ஏன்? கூந்தலில் தேளிருந்து கொட்டிற்றா என்ன? போடி கூந்தலில் தேளும் பாம்புமோ வரும்? ஒரு பூ வந்தது. கூந்தலில் பொதிந்திருந்த ஒரு த் விழுந்தது.' . . . . . . 'அதற்கோ அப்படி நெரித்தாள்? o ಶ பூவா? எனது களவைக் காட்டிக் கொடுத்த கள. ~~ -