பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
133


"கள்ளா? அப்படி என்றால்’,

  • கள்ளைப் பிறர் காணாமல் உண்பர். அக்கள் உள்ளே வேலை செய்து உடலில் தள்ளாட்டத்தை ஏற் படுத்திவிடும். பின்னர் உண்டவரே நாணமின்றித் தாம் குடித்ததைச் சொல்லுவர். கடுங்கள்ளை உண்ணா லாமோ என்று கேட்டோர் நடுங்குவர் அன்றோ? அது போன்றுதான் பூவைக் கண்ட தாய் நடுங்கினாள். கள் காட்டிக் கொடுப்பது போன்று இந்த ஒரு பூவும் என் களவைக் காட்டிக் கொடுத்து விட்டதடி’

'ஒரு பூவா? அஃது என்ன பூவோ? 'என்னபூதான் விழும்? முல்லைப் பூ தான் விழுந்தது? 'முல்லைப் பூவா? அஃது எப்படி உன் கூந்தலில் வந்தது? 'போடி... அவர் சூடிவந்த திரண்ட முல்லை மாலை யின் ஒரு துணுக்கைச் சூட்டியதுதான் உனக்குத் தெரி யுமே. அதை அப்படியே கூந்தலுக்குள் பொதிந்து கொண்டேன் அன்றோ? அதில் ஒரு பூதான் விழுந்தது. ஒரு பூதான். வீடே கொந்தளித்திருக்கின்றது. என்ன ஆயிற்று சொல்லேன். அஞ்சித்தவிக்கின்றேனே ஆறுதல் சொல்லடி.' - ‘அப்படித்தானடி குதிப்பார்கள். எதிர் வீட்டில் கொதித்தது தெரியாதா என்ன? அங்குஎன்ன ஆயிற்ருே அதுதான் இங்கும் முடிவாயிற்று. அடுத்த கிழமை அவர் வீட்டாரோடு பேசித் திருமண ஏற்பாடு செய்வதென்று முடிவெடுத்துள்ளார்கள். மணப்பெண்னே! வாடி மனைக்குப் போகலாம்.' முடிவைக் கேட்டவள் முடியில் கைவைத்து எஞ்சி யிருந்த, பின்னலையும் அவிழ்த்து அங்கு பொதிந்திருந்த முல்லை மாலைத் துணுக்கை எடுத்து முத்தமிட்டாள். முத்தத்தோடு ஒருபெருமூச்சு பிறந்தது. அதில் இன்பப் பூரிப்பு ஒலித்தது. - ஆம், ஒரு முல்லைப் பூதான் இத்துணைக் கலவரங்களை யும் தூண்டிவிட்டது. . -