பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135


ஆகிவிடுவாள் ஆகிவிடவேண்டும் ஆக்கிவிடவேண்டும். வேறு மாற்று இல்லை. இது முற்கால விதிப்பு. விதிவிலக்கு இல்லாத மரபு. அதைத்தான் இப்பாடல் நிகழ்ச்சி காட்டுகின்றது. அவன் அவளுக்குச் சூடவேண்டும் என்பதுகூட அன்று. ஒர் ஏறு தழுவல் நிகழ்ச்சி நடந்தது. ஆம் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி. ஒரு காளை வெறித்து வந்த கானையை அடக்கப் பாய்ந்தான். காளையின் கழுத்தைத் தழுவி அழுத்தினான். அவன் அணிந்திருந்த முல்லை மாலை காளையின் கொம்பில் சிக்கிக்கொண்டது. திமிறிய அலைப் பால் மாலை பிய்ந்து பூக்கள் சிதறின. ஒரு பூ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு குமரியின் கூந்தலில் போய்ச் செருகிக்கொண்டது. முல்லைப் பூவோடு காதலுணர்வும் பாய்ந்துவிட்டது. அவளும்தொலைத்தபெரும்பொருளைப் பெற்றது போலத் தலையில் அப்பூவை முடித்துக் கொண் டாள். ஆனால், அதை அடுத்து அவளுக்கொரு அச்சம் வந்தது. தாய் தலையில் முல்லைப் பூவைப் பார்த்தால், 'இது நான் முடித்ததில்லையே! பூ முடிக்கவும் தெரியாத உன் தலையில் எப்படியடி முல்லை வந்தது? என்று வினவுவாளே என்று நடுங்கினாள். இவள் கதையும் முடிவில் மணவறையில்தான் முடிந்தது. T முல்லைப் பூ அந்த அளவு வாழ்வியலைப் பிணிப்பதாக இருந்தது. - குமரனையும் குமரியையும் பிணைத்து மணமகன் மன மகளாக்கும் வாழ்வியற் சின்னமாகும் முல்லைப் பூ மரபாகவும் விதியாகவும் இப்பழக்கம், முல்லை நிலத்து மக்க ளாகிய ஆயர் குலத்திற்குரியதாகும். இஃதே ஏனையோருக்கும் மர பாக வளர்ந்தது. தமிழ் மாந்தரது வாழ்வு வளர்ச்சியில் முல்லை நில வாழ்க்கை இரண்டாவது படி, முதற்படி மலை வாழ்க்கை. அது குறிப்பிடத்தக்க வரையறைகளைக் கொண்டது அன்று விதிகளைக் கொண்டதன்று. மலையை விட்டிறங்கி அமைத்துக் கொண்ட முல்லை நில வாழ்க்கைதான் முதன்முதலில் வரையறைப்பட்ட வாழ்க்கையாயிற்று. அங்கு முளைத்த இயற்கை நெறிகள், பிற வளர்ச்சி வாழ்விற்கும் அடித்தளமாயின. முல்லை நிலத்து வீரன் 1. - கலி. : ...107