பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/175

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
139


முல்லைக் குடும்பம் - இவ்வாறு சொற்குடும்பத்தில் மலர்ந்த முல்லை ೨೧fi குலத்தில் கொடிப் பூ வகையைச் சார்ந்தது. கொடிப் பூக்களி ளெல்லாம் மேம்பட்டுத் திகழ்வது. -- - . கொடிப் பூக் குலத்தில் பிறந்த முல்லை தனக்கென ஒரு பெருங் குடும்பத்தைக் கொண்டது. இக்குடும்பத்தின் முலமும் முதன்மையும் முல்லையேயாகும். உலகனைத்திலும் இதன் குடும்பம் பல்கிப் பெருகியுள்ளது. இதனால் இது உலக மலர். உலக அளவில் பல நூற்றுக்கணக்கான பிரிவுகள் இதன் குடும்பத்தில் உள்ளன. பல வண்ணங்களில் மலர்வதாயினும் வெண்மையே இதன் மூல வண்ணம். . . - . - முல்லை (தவளம்), தளவம் என்னும் இரண்டுடன் ஊசி முல்லை, கொகுடி என்னும் இரண்டும் முதல் வகையைச் சார்ந்தவை. முல்லை வெண்மை நிறத்தது, தளவம் செம்மை நிறத்தது. அதனால் செம்முல்லை எனப்படும். முல்லை வடிவத்திலேயே அக விதழ்களும் செம்மையாக அமையும். புறவிதழ்களும் செம்ம்ை நிறத்தவை. இதன் தோற்றம் சிரல் என்னும் கிச்சிலிப்பறவையின் அஃதாவது மீன்கொத்தி என வழங்கப்படுவதன் மூக்கு போன்று கூர்மையானது என, -- . ‘'சிரல் வாய் உற்ற தளவு 1 -என்றும் பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை'2 -என்றும் கூறப்படும். இது முள் போன்று கூர்மைகொண்டது என்பதை, - தளவின் 'இதல் முள் செத்தனை" -என்னும் அகப் பாடலாலும் அறியலாம். முல்லையில் செம்மை நிறம் கொண்டது இஃது ஒன்றே (தமிழக அளவில்). - - - - தமிழில் தளவும் செம்மையையும் தவளம் வெண்மையையும் குறிக்கும் சொற்கள். அதனால் வெண்மை நிற முல்லை. தவளம் எனப் பட்டது. ஆனால் இச்சொல்லாட்சி சங்க இலக்கியங்களில் இல்லை. சிலப்பதிகார காலத்தில் இவ்வழக்கு புகுந்தது என்று அறிய முடிகின்றது. 1 நற் : 61 : 8. 3 அகம் : 28: 3, 2 ஐங் ;: 447.