பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
140


வெண்மை முல்லையைச் சேர்ந்தது ஊசி முல்லை. இது முல்லையைவிடத் திரட்சியில் சிறுத்தது. அளவில் சிறியது. முனை அதனை விடக் கூர்மையானது. ஊசி போன்ற முனையை உடைமை யால் இப்பெயர் பெற்றது. ஆனால், மனத்தில் முல்லைக்கு ஈடு கொடுக்கக் கூடியதன்று. அடுத்துக் கொகுடி என்பது முல்லை வகையைச் சேர்ந்தது. 'கோங்கமே குரவமே கொழுமலர் புன்னையே கொகுடிமுல்லை வேங்கையே ஞாழலே விம்முபா திரிகளே விர வியெங்கும்' -என்னும் தேவாரத்தில் கொகுடியை முல்லையாகக் காண்கின்றோம். இதன் வடிவமும் முல்லை போன்றதேயாயினும், முனை அவ்வளவில் கூர்மையின்றிக் குவிந்த அளவானது. இதனைச் சூளாமணி என்னும் காப்பியம், 'குவி முகையன கொகுடி'2 -என்று காட்டுகின்றது. முல்லைக் குடும்பத்தின் உற்றார் மெளவலும், குளவியும் உறவோர் மல்லிகை. இனத்தார் சேடல், அதிரல், பிச்சி என்பவை. இவற்றுள் இனத்தார் தனிக்குறிப்பில் பின்னர் குறிக்கப்படுவர். இங்கு, தொடர்பாக உற்றாரையும் உறவோரையும் காண வேண்டும். மெளவல் முல்லையின் உற்றாளில் ஒருத்தி, முதலில் முல்லை வேறு, மெளவல் வேறு என்பதை உணரவேண்டும். குறிஞ்சிப் பாட்டில் அடி ?? இல் முல்லை உளது. அடி 81இல் தனியே மெளவல் உளது. கபிலர் இரண்டையும் வேறுவேறாகவே காட்டி யுள்ளார். இசைத்தமிழில் குரல் என்னும் இசைக்குரிய மணம் மெளவல் மணம் என்றும், துத்தத்தின் மணம் முல்லை மணம் என்றும்குறிக்கப்படும். இவ்வகைகொண்டும் முல்லையும் மெளவலும் வெவ்வேறானவை என அறியலாம். ஆனால், இலக்கியங்களில் மெளவல், முல்லைபோன்றே பேசப்படும். சில இடங்களை நோக்கும்போது முல்லையையே மெளவலாகக் கூறியிருப்பது தென் படும். இதற்குக் காரணம் இரண்டும் பலவகைஒற்றுமையும் ஒருசில வேற்றுமையும் கொண்டுள்ளமையாகும். 1 ஞான தே: வடகுரங்கு:1, 2 தளா தூது : 4. &ε. ,