பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146


தன் அறிகுறி அவள் பருவம் அடைந்தாள் என்பதை ஊரார்க்கும் அறிவிப்பதாயிற்று. முல்லை இவ்வாறு அரும்பிப் பூப்பது அவள் கன்னிமை மலர்ந்ததன் அறிவிப்பாயிற்று. முல்லை அரும்பிப் பூப்பது கொண்ட்ே பெண் பக்குவமடைவது பூப்பு’ எனப்பட்டது. பூப் படைந்தவள் பூத்தனள்’ எனப்பட்டாள். இப்பருவம் வந்தும் இப் பக்குவம் அடையாதவள் பூவாதாள்’ எனப்பட்டாள். பரிபாடல் வையையாறு பல பூக்களுடன் பொலிந்து வரு வதை வைத்து நயமாக இருபொருள்படும்படி 'பூத்தனள் நங்கை; பொலிக 2 என்று பாடியது. முல்லை. பூத்தால் அக்கொடியை வாழ்த்துவது ஒரு மரபு. அம்மரபு பூத்த மங்கையையும். 'பொலிக' என வாழ்த்துவதை இப்பரிபாடலும் காட்டுகின்றது. இதனைச் சீவக சிந்தாமணி, 'கொம்பலர் நங்கை பூத்தாள்; பொலிக' என 'முல்லையும் பொலிக, பூத்த மங்கையும் பொலிக' என இருபொருள் படும்படி பாடிக் காட்டியது. பூப்பு தோன்றிய மங்கைக்கு முதல் நீராட்டுசெய்வர். அதனை ஒரு மங்கல நிகழ்ச்சியாகச் செய்வர். அஃதொரு விழாவாக நிகழும். இக்காலத்தும் பூப்பு நீராட்டு விழா மங்கல முழக்கத்துடன் நிகழ்த் தப்படுவதைக் காண்கிறோம். இவ்விழா மங்கைக்கு மட்டுமன்று முல்லைக்கும் எடுக்கப்படும். பேதைப் பெண் முல்லை வளர்ப்பதையும், அம்முல்லை அரும்பு ஈனுவதையும், அதற்கும் சேர்த்து முழக்கத்தோடு விழா நிகழ்வதையும் நைடதம் நினைவுபடுத்துகின்றது : 'அல்லியங் கோதை மாதர் அன்புடன் வளர்த்த முல்லை மெல்லரும்பு ஈன்ற தென்னா விழா' 生平 இதற்கு உரை வகுத்தவர், 1 'பூவாதாள் பூப்புப் புறங்கொடுத்தாள்' -சிறுபஞ்சமூலம் : 42 2 பரி : 18 : இ0, 4 நைட : நாட்டுப் புடலம் 18. தை- நா.ப. .