பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
148


இவற்றிலெல்லாம் மேலாக ஒரு குமரன் கன்னி ஒருத்திக்கு முல்லை மலரை வழங்க அவள் பெற்றுக்கொண்டாலோ, அவளது கூந்தலில் சூட்டினாலோ அவனது காதலை ஏற்றுக் கொண்ட தாகும். முன்னே கண்ட கலித்தொகைப் பாடல்களின் கருத்துப்படி முல்லை, காதல் நோக்கமின்றிப் பட்டுத் தெரித்துக் கூந்தலில் செருகிக் கொண்டாலும் அவள் அவனுக்கு உரியவள் என்றாகி விடுவாள். 1 'அப்பூ வந்ததென் கூழையுள் வீழ்ந்தன்று மன்' -என்றாள் ஒரு கன்னி. அதனை அவள் விரும்பிச் செருகிக்கொண்டாள். கூந்தலில் தோய்ந்த அதன் மணம் மறுநாள் தாய்க்குத் தெரிய அவள் வழி, வீட்டார்க்குச் செய்தி தெரியப் பெற்றோரும் உடன் பிறந்தோரும் காரணமறியாது சினந்தாராயினும் இறுதியில் அதனை எவ்வாறு கருதினார்கள் என்பதைத் தோழி கூறுகின்றாள் : "மண்ணி மாசற்ற நின் கூழையுள் ஏறு அவன் கண்ணி தந்திட்டது எனக்கேட்டுத் திண்ணிதாத் தெய்வ மால் காட்டிற்று இவட்கு எனக்கொண்டார்'? -என்றாள். முல்லை செருகியது தெய்வம் காட்டியது என்று கொண்டனர். அதன் காரணம் முல்லையால் அமைந்த மரபை நினைந்ததே யாகும் கற்பு முல்லை முல்லையின் காரணமாகத் திருமணம் நிகழும் என்றாலும் அஃது ஒர் அறிவிப்பு நிகழ்ச்சியாகவே முடியும். முல்லை அவளது கூந்தலில் அமர்ந்ததே அவள் மனைவியாகவும் அவன் கணவனாக வும் ஆகிவிட்டதன் அறிகுறியாகும். கன்னியாக இருந்த பெண் முல்லையைச் சூடினாலே கற்பில் அமைந்து மனைவி ஆகிவிட்டாள், அந்த அளவில் முல்லை மரபு அமைந்தது. கற்பின் அறிகுறி முல்லை ஆயிற்று. மகளிரின் கற்பு, முல்லையின் தொடர்பிலே பேசப்படும். . 'முல்லை சான்ற கற்பின் மெல்லியல்" - சிறுபாண் : 30 'முல்லை சான்ற கற்பின் மெல்லியல் ب 3 وسدة : 107 : قوة 2 9 : 107 : 5 = 1