பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
149


குறுமகள்' - நற் : 142 “முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள்' - அகம் : 274 இவ்வாறு பல்வேறு இலக்கியங்கள் ஒரே வகை தொடரால் முல்லையொடு கற்பை இணைத்துப் பாடின. இவைகொண்டு முல்லை கற்பின் சின்னம் என்பது எந்த அளவில் அடிப்பட்ட வழக்காயிருந்தது என்பதை உணரலாம். இவற்றிற்கு எல்லாம் உரை எழுதியவர்கள், 'முல்லை சூடுதற்கு அமைந்த கற்பு’ -என்றும், "கற்பின் மிகுதி தோன்ற முல்லை சூடுதல் இயல்பு'1 -என்றும் விளக்கினர். இம்மரபு ஆழ்ந்த பிடிப்பாகி 'முல்லை’ என்ற சொல்லுக்கே 'கற்பு’ எனும் பொருள் ஏறியது. 'மெளவலும் தளவமும் கற்பும் முல்லை'2 -எனச் சேந்தன் திவாகரம் முல்லைக்கு ஒரு சொல் 'கற்பு’ என்று அமைத்தது. கட்டியங்காரன் அநங்கமாலை என்பவளது கற்பைப் பறித்தான் என்பதைத் திருத்தக்க தேவர், தரனுடை முல்லை எல்லாம் தாது உகப் பறித்திட்டானே'8 -என்று கற்பை முல்லை என்னும் சொல்லாலேயே குறித்தார். இதற்கு உரை வகுத்த நச்சினார்க்கினியரும், 'சிவகனையே கூடுவன் என்றலின், முல்லை - கற்பு’ என்று குறித்தார். . முன்னர் கொற்றவை முல்லைக் கொடி வளர்த்த செய்தி கண்டோம். அவ்விடத்திலும் அதன் உரையாசிரியர், "தேவி முல்லை வளர்த்தற்குக் காரணம் கற்புடைமை என உணர்க'; -என விளக்கினார். இவ்வாறு முல்லை கற்பின் எல்லை அளவாயிற்று. 1 சிறுபான் : 30 தச்சர் உரை. 2 சீவ, சி : 686 2 சேந், தி : மரப்பெயர் 197, 4 தக்க : 75 உரை