பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

150


பெண் சிறுமியாகப் பேதை, பெதும்பைப் பருவத்தளாக் இருக்கும் போது முல்லை சூடாள்; சூட்டவும் மாட்டார்கள். முல்லை சூடினால் அவளது கன்னித் தன்மை போய்த் தலைவி ஆகிவிடுவாள். பின்னர் வாழ் நாள் முழுவதும் முல்லையைச் சூடுவதனின்றும் நீங்காள். மங்கலம் இழப்பின் சூடாள். மங்கலச் சூட்டாகவே முல்லை அமைந்தது.

   கணவனது பிரிவால் ஒப்பனை ஒன்றும் செய்துகொள்ளா திருந்த கண்ணகியார் கூந்தலில் மட்டும் ஒரு மலர் சூடியிருந்தார். அதனைப்,
    
       "போதுசேர் பூங்குழலார்"
                     -என்று இளங்கோவடிகள் பாடினார். என்ன போது? "முல்லை மலர் பற்று அறாத பூங்குழல்"1 என அடியார்க்கு நல்லார் விடை வைத்தார். அதிலும் கணவனோடு கூடியிருக்கும்போதுதான் சூடுவர். அப் போது சூடுவதினின்றும் நீங்கார். தாயாகினும் முதுமை பெறினும் முல்லையை விடார்.
   "அழகிய நெற்றியை உடைய தலைவி முல்லை மலரைக்
    கற்பின் முடியாகச் சூடித் தன் பக்கத்தே மகனோடு விற் றிருக்கத் தலைவன் இனிது இருந்தான்"2                -என்று 

ஐங்குறுநூறு பாட,

   "நல்ல குலத்திற் பிறந்த கற்புடைய பெண்களுக்கு
  வளப்பமான முல்லை மலரைச் சூடுவது சிறப்பாகும்"3 -எனக் குலோத்துங்கக் கோவை விதித்துக் கூறியது. இவ்வாறு

அமைவது ஒரு விதிப்பு என்பதைப் "பற்று அறாத முல்லை" என்றதனின்றும் உணரலாம். 1. சிலம்பு :13:22

2 "வான்நுதல் அரிவை முல்லை மலைய

இனி திருந் தணனே நெடுந்த கை துனிதீர் கொள்கைத் தன் புதல்வனோடு பொலித்தே"

                                   -ஐங் : 408 8 குலோ த்துங்கக்கோவை .168