பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

151


முல்லைச் சூட்டு

   மிகப் பழங்காலத்தில் திருமணத்தின் மங்கலச் சின்னமாக் மங்கல நாண் பூட்டல்-தாலி கட்டல் இருந்ததில்லை. அக்காலத்தில் திருமணச் சின்னமாக அஃதாவது நிலைத்த அணியாக ஏதும்

அணிவித்ததாகக் குறிப்பு இல்லை. திருமணக் குறிப்பைத் தரும் மற்றொரு அகநானூற்றுப் பாடல்,

   "தன் நறு மூகையொடு வெண் நூல் சூட்டி"1-என வெண்மையான நூலில் குளிர்ந்த மணம் மிக்க முகையைக் கட்டிச் சூட்டியதாகக் குறிக்கின்றது. இம்முகை முல்லை முகையாகலாம். முல்லைதான் இருவரது இணைப்பிற்கும் வகை செய்தது. அது கொண்டே அவர்களது களவுக் காதல் வெளிப்பட்டது. எனவே, அதனையே சின்னமாகக் கொண்டர் எனலாம்.
  இந்த 'நூல் சூட்டு' அணிவித்தல் பிற்காலத்தில் வளர்ந்து, மரபு ஆகி, முல்லை மலரால் செண்டு செய்து நெற்றி யில் படுமாறு தலையில் சூட்டப்பட்டது. இதனை மணமகன் மணமகளுக்குச் சூட்டினான். இது 'முல்லைச் சூட்டு' எனப் பட்டது. இத்தொடர் சங்க இலக்கியங்களில் இல்லை. பிற்கால நூல்களில் குறிக்கப்படுகின்றது. எனவே, சங்க கால அளவில் அல்லது. அதற்கு முன்னரும் நூலில் கட்டிச் சூட்டப்பட்ட முல்லை மங்கலச் சின்னமாகக் கருதப்பட்டதாகக் கொள்ளலாம். மேற்கண்ட அகநானூற்றுப் பாடலிலும் "வெண் நூல் சூட்டி" எனச் சூட்டுதல் குறிக்கப்படுகின்றது. சூட்டுதல் தலையணிதலையணி. அதிலும் நெற்றியில் படுமாறு சூட்டுதல் சுட்டி எனப்படும். எனவே நூலில் முல்லை யைக் கட்டி நெற்றியில் கட்டினர் எனலாம். (இக்காலத்திலும் பட்டம் கட்டுவோர் பொன் காசுக்கு மாற்றாக முல்லைப் பூவை நூலில் கட்டி நெற்றியில் கட்டுவதைக் காணலாம்) இந்த 'நூல் கட்டுச் சூட்டே' பிற்காலத்தில் 'முல்லைச் சூட்டு என வளர்ந்தது. 
   "......................மடவாள்
    கரும்பும் இலையும் மயக்கி ஆய்ந்த
    முல்லையஞ் சூட்டு மிலைச்சி"-என்றும்.
    "முல்லையஞ் சூட்டு வேயின்
     முரிந்துபோம் நுசுப்பு"- என்றும். 
    "பன்னிறச் சுரும்பு சூழும் முல்லைச் சூட்டு வேய்ந்தார்" 2

1 அகம் : 186:14 2 சீவ. சீ: 2488; 624 ; 8119,