பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் ஒரு பூக்காடு;pdf/19 திருத்தப்பட்டது

கவிஞர் கோமானாகிய கோவை.இளஞ்சேரனார் நாடறிந்த நற்புலவர். நற்றமிழாயும் ஆய்வறிஞர்;நாவலர்: சொற்றமிழ் தோயும் தமிழ்ப்பாவலர்.தமிழ் முழுதுமறிந்த தன்மையர்.

 நாகையில் தமிழ் 

வளர்க்கும் சேரனார் மறைமலையார்க்கு திருவுருவச் சிலை தோற்றுவித்தச் செயல் வல்லுநர்.

 நூலாருள் நூல் வல்லாராக,நூண்மான் 

நுழை புலம் வாய்ந்த இளஞ்சேரனார், நமக்கோர் இளங்கோ வாக இலங்கி வருகிறார்.

 செய்வனத் திருந்தச் செய்யும் சீர்த்தி சான்ற இச் செந்தமிழ்ப்புலவர் மரபு தெரிந்த மாட்சியும், புதுமை விழையும் புதுநெறிக் காட்சியும் சிறக்கப் பெற்றவர்.
 கருத்தாழமும் தெளிவும் தோய்ந்த இச் சான்றோரது நூல்களால் தமிழ் நாடு பயன் பெறும்.
                         டாக்டர் ஒளவை.நடராஜன்,
                         எம்.ஏ;பீ.எச்.டி;
                               தமிழ்நாட்டரசு
                    மொழி 

பெயர்ப்புத்துறை இயக்குநர்.

                                 சென்னை.திருத்தம் பார்க்கப்பட்டது