பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

154


பெண்ணின் தலையில் ஏறிப்பெற்றோரை மணத்திற்குத் பழக்கப்பட்ட முல்லை தன் இனத்திலும் இப்பணியைச் செய்ததாகக் கூறியது, மரபின் நினைவும் ஆகும்.

வாழ்த்து மலர்

  திருமணத்தின் நிறைவு என்பது வாழ்த்துதான். திருமணமே வாழ்த்துக் கூறுவதாகவே அமைந்தது. அவ்வாழ்த்தையும் மலர் தூவி வாழ்த்துவதாகவே தமிழர் கண்டனர். யாவற்றிலும் மணிமுடி நிகழ்ச்சியாக மணமக்களை வாழ்த்த முல்லை மலரையே பயன்படுத் தினர். வாழ்த்தித் தூவுவதற்கு ஒரு கலவை செய்தனர். ஆடவரது உழைப்பின் பயனாகிய நெல்லையும் மகளிரது கற்பின் சின்னமாகிய முல்லையையும் கலந்த கலவையே வாழ்த்துக் கலவையாயிற்று.
  
   முகத்தல் அளவை நாழி எனப்படும். அது மரத்தால் ஆகிய படி, அதில் நெல்லையும் அரும்பு அவிழ்ந்த முல்லை மலரை யும் கலந்து வைத்து மங்கல மடந்தையரும், சான்றோரும் எடுத்துத் துாவி வாழ்த்தினர்.
    "நெல்லொடு நாழி கொண்ட நறு வீ முல்லை
     அரும்பவிழ் அலரி தூஉய்தூஉய்"1-வாழ்த்தியதை முல்லைப் பெயரில் எழுந்த இலக்கியமாம் 'முல்லைப் பாட்டு’ காட்டுகின்றது.
   திருமண நிகழ்ச்சியைக் காட்டும் அகநானூற்றுப் பாடல் உள்ளது. அதில் மணமக்கள் வாழ்த்தப்பட்ட-செய்தி உள்ளது. திருமண நிகழ்ச்சியின் முன் மணமகளை நீராட்டுவது ஒரு மங்கல நிகழ்ச்சி. அதிலும் முல்லை மலர் நெல்லொடு நீரில் கலந்து நீராட்டப்பட்டாள்.
   "நீரொடு பொலிந்த ஈரிதழ் அலரி
    பல்லிருங் கூந்தல் நெல்லொடு தயங்க
    வதுவை நன்மணம்"2 -என்னும் அடிகளில் "ஈரிதழ் அலரி" என்பது. ஈரம் தோய்ந்து அலர்ந்த முல்லை மலரைக் குறிக்கும். முல்லைப் பாட்டிலும் முல்லை, அலரி எனப்பட்டதையும் இணைத்துக் காண வேண்டும்.

1 முல். யா 8.9, 2 அகம் 86:15.11