பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157


"மாலைப் போதில் சோலையின் பக்கம்' சென்றதால் வந்தது. இப்படிக் கொடியில் - காரில் - மாலையில் சிரித்து அவற்றிற் கெல்லாம் பெருமைதருவதுமுல்லை. இச்சிரிப்பு எழிற்சிறப்பு; ஏற்கத் தக்க நகைப்பு. இம்முல்லையே ஏற்கத் தகாத நகைப்பையும் நல்கும். கன்னியையும் காளையையும் கூட்டி வைத்து அவர்களுடன் கூடிய முல்லை அவர்களது பிரிவின்போதும் பிரிந்து நின்று வேடிக்கை பார்க்கும், அந்நேரத்தில் தலைவிக்கும் தலைவனுக்கும் பொல்லாங்கைத் தரும். பொருள் ஈட்டவோ, நாட்டுப் பணி காரணமாகவோ பிரிந்து செல்லும் அவன், கார்காலம் தொடங்கும் முன் மீண்டுவிடுவேன்' என்று சொல்விச் செல்வான். கார்காலத் தொடக்கத்தில் முல்லை பூக்கும். இதனைப் பார்த்ததும் அவள் நினைவால் அவள் வருந்து வாள். அவள் வருத்தத்தை எண்ணி அவன் கவல்வான். இவ்வாறு இருவரையும் வருந்த வைக்கும் கடிய செயலையும் செய்யும். இம்மலர்ச்சியைப் புலவர்கள், அவளைப் பார்த்து ஏளனமாகப் புன்முறுவல் பூப்பதாகப்பாடினர். முல்லை. அவளாலே வளர்க்கப்பட்டது. தன்னை வளர்த் தெடுத்தவள் வாடுவதைக் கண்டு தானும் வாடவேண்டிய முல்லை, இவ்வாறு புன்முறுவல் பூப்பது நன்றிகொன்ற கொடிய செயல். இக் கொடிய குணம் இதற்கு எவ்வாறு வந்தது? ஒரு புலவர் நயத்துடன் காரணம் கூறுகின்றார் : "எற்றே கொடிமுல்லை தன்னை வளர்த்தெடுத்த முற்றிழையாள் வாட முறுவலிக்கும்?' -இஃது அவரே எழுப்பிக் கொள்ளும் வினா. "முற்ற முடியாப் பரவை முழங்குலகத் தெங்கும் கொடியார்க்கும் உண்டோ குணம்” இது நயமான விடை. முல்லையோ கொடிமுல்லை. கொடியில் பிறந்ததால் கொடியார் ஆயிற்று. கொடியவரிடம் நன்றி காட்டும் குணத்தை எதிர் பார்க்கலாமா? அக்குனம் உண்டாகுமோ? இவ்வாறு வினவுவதற் கும் முல்லை ஒரு காரணமாயிற்று. 1. و غة ى சிலேடையில் முடித்தலுக்கு எடுத்துக்காட்டு, : -