பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160


தானே எழிற் சிரிப்பையும் ஏளனச் சிரிப்பையும் காட்டிய முல்லை, மங்கையர், மழலையர் உதடுகளில் தவழ்ந்து எழிலையும் பொலிவையும் எழுச்சியுறச் செய்யும். தானே பல்லாகிச் சிரித்த சிரிப்பை மாதர் பல்லில், மழலையர் பல்லில் வைத்தது முல்லை. அதனையும் முல்லைச் சிரிப்பு' என்னும் பெயரில் வைத்தது. கலித்தொகைத் தலைவி ஒருத்தி இளமை மெருகில் நின்றாள். அவளது எழிற்கோலத்தை முல்லைப் பல்லில் கண்டு அவன் பாராட்டினான். காலம் சிறிது கடந்தது. அவன் பாராட்டி யதை வைத்து ஒருவகையாக அவனைச் சாடுகின்றாள்: மணக்கும் முல்லை அரும்பை வரிசையாக வைத்தது போன்ற, 'எனது பல் அழகைப் பாராட்டிப் பேசினாய். அது போதே நீ ஒன்றை நினைத்திருக்க வேண்டும். முல்லை முகையாகவே இல்லாமல் மலராக மலரக்கூடியது. முகை போன்றே பல் முல்லை மலர் போன்று கழன்று விழும் என்பதையும், அதனால் இளமை கழியும் என்பதையும், எண்ணியிருக்க வேண்டும்’1 -என்றாள். இங்கு இளமைக்கும், அது கழிதற்கும் முல்லை முகையும் மலரும் சான்றாயின. மகளிரது முல்லை முறுவல் ஆடவரை மயக்கிக் கிறுகிறுக்க வைக்கும் கவர்ச்சி விளையாட்டு. இக்கவர்ச்சி காமக் கிலுகிலுப்பை இயக்குபவர் மங்கையர். அவர்தம் இயக்குநர் முல்லை முகை, ஆனால், இது தவழும் குழந்தையின் வாயில் பிறந்தால் என்ன நிகழும் ? பாரதி பாடுகின்றான் : 'முல்லைச் சிரிப்பாலே - எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்'2 மழலையில் முல்லைச் சிரிப்பு மூர்க்கத்தை - கொடுவெறியைச் சாய்க்கும் வல்லமைகொண்டது இவ்வாறு உவமை யால் - உருவ க த் தால் முல்லை இலக்கியத்தில் தவழ்ந்தும் தழைத்தும் நடந்தும் ஒடியும் விளை யாடும். காதலில் மட்டுமன்று: 1 'நறுமுல்லை நேர்முகை ஒப்ப நிரைத்த செறிமுறை பாராட்டி னாய்மற்றெம் பல்லின் . பறிமுறை பாராட்டினையோ ஐய' -கலி : 22 : 9-11 2 பா. பா: கண்ணம்மா.என். குழந்தை :