பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/198

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
162


மனப்பாள், மணத்தல்' என்றால் கூடுதல்' என்று பொருள் இருவரையும்கூட வைத்ததே முல்லைதானே. இத் தொடர்பில் தான் அவர்களது வாழ்க்கை இணைப்பு நிகழ்ச்சி மனம்’ என்று பெயர் பெற்றது. அது 'வாவை மனம் ஆயிற்று. அது திரு' பெற்றுக் காலப் போக்கில் 'திருமகனம ஆயிற்று. எனவே முல்லை மணம் ஈந்த சொல்லே திருமணம். சொல்லை மனமாக்கியது மட்டுமன் :1; தன்னைச் சேர்ந் தோரையும் மணஞ்செய்து கொள்ள வைத்தது மட்டுமன்று; அவர் தம் உடலையும் மணக்க வைத்தது . இளமைக் கட்டுக் குலையாமல், மனத்தை மங்கையர்பால் மல்லாத்திவிடாமல் காத்த குமரனது உடல் முல்லையாக மணக்கும் என்பர். உடல் முத்திரை இலக்கணம் (சாமுத்திரிகாலட்சணம்) கூறும் நூல்களும் துரிய விடலையின் (பிரம்மச்சாரியின்) உடல், முல்லை மணம் காட்டும் என்கின்றது வள்ளலார் இராமலிங்க அடிகளாரது உடலில் ஒருவகை மணம் எழுந்தது என்பர். அந்த மனம் முல்லை மணமாக இருக்கலாம். விவேகானந்த அடிகனார் உடுத்திக் களைந்த ஆடைகள் முல்லை மணந்ததாகப் பேச்சு உண்டு. தமிழ் இலக்கியத்தில் இக்கருத்து தென்படுகின்றது. ஒரு தலைவி அரிசில் கிழார் என்னும் தமிழ்ப் பேரறிஞர் சொற்களில் பேசுகின்றாள்; பேசிப் பூரிக்கின்றாள். - ‘கடந்த முழு நிலவு நாள். எங்கும் வெண்ணிலாவின் ஒளி நிறைந்திருந்தது. அவர் எனது தோள்களைத் தழுவி இன்பம் தந்தார். ஆகா, அப்போது அவரது உடலில் கமழ்ந்த மனத்தை என்னென்பேன்! அவர் இறுகத் தழுவியதில் அந்த மணம் எனது உடலில் ஏறிற்று. அது முல்லையின் மணம். முல்லை முகையின் மனம். அன்று முதல் எனது உடலில் மணம் கமழ்ந்துகொண்டே உள்ளது. இன்றும் கமழ்கின்றது’ இப் பேச்சு அவளது இன்பத் தினவில் எழுந்ததாகலாம். ஒரு திங்கள் கழிந்தும் அவனது முல்லை மணம் இவளது உடலில் மணப்பதாகக் கூறியது இன்பக் கிறுக்கின் உளறல்தான். இருப் பினும் ஆடவர் உடலில் முல்லை மணக்கும் என்னும் கருத்து தெரிகின்றது. இம்மணத்தை உடல் இயற்கையாகவும் பெற்றிருக்க, லாம். முல்லை மலரைக் கண்ணியாகவும் தாராகவும் நாள்தோறும்