பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163


பயன்படுத்தியதாலும் ஏறிய மணமாகவும் இருக்கலாம். எவ்வாறா யினும் முல்லை மணம் இன்பக் கிளர்ச்சி தருவது; கவர்ச்சி மணம் என்பது உண்மையாகின்றது. இந்த மணம் காட்டும் பாடல், உணர்வால் மோந்து சுவைக்கத்தக்கது: 'மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை தட்டைப் பறையிற் கறங்கும் நாடன் தொல்லைத் (கடந்த) திங்கள் நெடுவெண் ணிலவின் மணந்தனன் மன் என் தோளே; இன்றும் முல்லை முகைநா றும் மே'1 . இதனை எழுதிய எழுத்தாணியை மோந்து பார்க்க வேண்டும் போல் உள்ளது. அவன் முல்லை மணம் இவள்மேல் ஏறினால், அவளுக்கு மணம் இல்லையோ என்றால், ... . . . ... ... ... முல்லை இடும்பல் கூந்தல் நாற்றமும் முருந்தேர் வெண்பல் ஒளியும் நீ பெறவே” -என ஒரு, தோழி 'உனது கூந்தலின் முல்லை மணத்தைப் பெறுவாய் என்றாள். அவன் தார் அணிந்தவன். மார்பில் முல்லை மனம் கமழ்ந்தது. இவள் கூந்தலில் சூடியவள். கூந்தல் முல்லை மணம் வழங்கிற்று. முல்லை மணம் காதல் உணர்விற்கு மட்டும் அன்று; உடம்பில் புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தருவது. ஒரு நாட்டு வழக்குப் பாடல். - - 'பச்சைத் தண்ணியிலே பல்லைக் கழுவு; முல்லைக் காற்றிலே முகத்தைக் கழுவு' -இந்த நாட்டு வழக்கு, முகத்தை முல்லை மணம் கமழும் தென்றலாலே கழுவிக் கொள்ளச் சொல்கின்றது. காற்றாலே கழுவுவதாம். அருமை யான நயம். சோர்வு என்னும் அழுக்கு கழுவப்பட்டுப் புத் துணர்ச்சி பிறப்பதை மிக நயம்படக் கூறும் எழுதா இலக்கியம் இது. - 1 குறு : 198.