பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165


க்ாவல் முல்லைப் பூதனார்-எனப் பெண்பால் ஆண்பாற் புலவர் பெயர் சூடினர். பிரெஞ்சுக் கவிஞர் ஒருவர் 'சாக்குவசு செசுமின்' என முல்லைப் பெயர் கொண்டு விளங்கினார். - 'முல்லை நகை வடிவாள்' என்று திருமயேந்திரப்பள்ளி அன்னைக்கடவுளர்க்குப் பெயர். 'முல்லைவனநாதர்'சிவபெருமான், திருமுல்லைவாயில், முல்லையூர், முல்லைக்காடு, முல்லைப் பாடி என ஊர்ப்பெயர்களில் முல்லை வாழ்கின்றது, ஊரைச் சுற்றிலுமே முல்லை பூக்கும் கொடிகள் வேலியாகப் படர விடப்படும். அஃது ஊருக்கு அழகு, வளம், மணம் இவற்றால் பெருமை தந்தது. அவ்வூர்கள் 'முல்லை வேலி ஊர்” என்றே பாடப்பட்டன. பேகன் என்ற பெருவள்ளல். 'முல்லை வேலி நல்லூரானே' எனப்பட்டான். 'வேலி சுற்றிய நறுவி முல்லை" என்றும் 'முல்லை தலை அணிந்த முஞ்ஞை வேலி' என்றும் பாடப்பட்டன. மாணிக்கவாசகர் படைத்த திருக்கோவையார்த் தலைவி "முல்லை வேலி எம்மூர்' 4 என்றாள். முல்லைக்காரன் என்பான் குத்தகைக்காரன், பண்ணைக் காரன்' என்று கொள்ளப்படுவதாகச் சென்னப் பல்கலைக் கழக அகர முதலி கூறுகின்றது. ரு ல்லையைப் பயன்படுத்த அதனைக் கொய்வது மகளிர்க்கு ஒருவகைப் பணியாக இருந்தது. குடிக்கொள்ளவும், விலைக்கு விற்கவும் கொய்வர். . . "அவல் (குடைவாக) வகுத்த பசுங்குடையால் புதன்முல்லைப் பூ பறிக்குந்து' என்னும் அடிகளால் பசுமையால் பனைமட்டையைக் குடைவான சிறு கூடைபோன்று வணைந்துகொண்டு அதில் புதரிற் பூத்த முல்லைப் பூக்களைப் பறித்ததை அறிகின்றோம். TTçä 44 : 14, 4 திருக்கோ : 186. 2 அகம் 814:19 . 5 புறம் : 852 : 3, 4, 8 பெருங் : 4 : 2 : 68, -