பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168


"இளையோர் சூடார்; வளையோர் கொய்யார், நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான்; பாடினி அணியாள் ஆண்மைத் தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே' -என்று ஓலமிட்டுப் பாடினார். - - இப்பாட்டு துக்க காலத்தில் முல்லை சூடார் என்பதை மட்டும் அன்று. எவரெவர் முல்லையைச் சூடுவர் என்று பல்வகையினரை யும் காட்டுகின்றது. இளைய குமரர் குடும் பழக்கத்தையும், வளை யணிந்த மகளிர் கொய்வர் என்பதையும், பாணன் தன் யாழால் கொடியை வளைத்துக் கொய்வான் என்பதையும், பாடிணி அணி வதையும் காட்டுகின்றது. மாந்தரில் சாதி வகுத்தவர் கருத்தில் முல்லை விடுபட வில்லை. தமிழகத்தில் சிறப்பாகக் கொள்ளப்படுவதைத் தமதாக்கிக் காட்டுவது வந்தேறிகளது வாடிக்கை. அவர்கள் கருத்தில் முல்லை பெற்றுள்ள சிறப்பிடம் பட்டது. அது முதல் சாதி-எமது சாதி என்று படைத்து மொழிந்து கொண்டனர். முல்லையும் முல்லை இனமும் எங்கும் பூக்குமாயினும் தமிழ் நாட்டார் தம் மரபுக்கு ஒருவகைச் சின்னமாகக்கொண்டனர். முல்லை நில மக்களாக வாழ்வை வளர்த்துக்கொண்டபோது அமைந்த மரபுகள் தமிழர் யாவர்க்கும் அமைந்தன. மேற்கண்ட பாடலில் உள்ள சூடாதாள் பட்டியல் யாவரையும் குறிக்கவில்லை என்றாலும் குறிக்கப்பட்டவரை வைத்துக் கானும் போது ஒன்று புலப்படும். இளையோர், வளையலணிந்த குமரிகள் என்ற அளவில் மக்களில் அனைத்து வகையினரும் அடங்குவர். பாணன், பாடினி என்ற வகையில் கலைஞர் பரிசில் வாழ்க்கை எளியோர் அடங்குவர் எனவே, தமிழகத்தில் சாதிப் பாகுபாடு புகுத்தப்பட்ட பின்னரும் முன் மரபுப்படி அனைத்து வகை மக்களும் முல்லையைத் தம் வாழ்வில் கொண்டனர். இதனை இலக்கியங்கள் பரவலாகவும் உறுதியாகவும் தெரிவிக்கின்றன. 1. புறம் : 242.