பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/207

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
171

i

i - கொன்றை, ஆம்பல், முல்லை என்பன.சில (இசைக்) கருவி. இனி அவற்றை பண்ணென்று கூறுப எனில் அங்ங்ணம் கூறுவாரும் ஆம்பலும் முல்லையுமே பண்ணாதற்குப் பொருந்தக் கூறின் அல்லது கொன்றை என்றொரு பண் இல்ல்ை' T - - -என அடியார்க்கு நல்லார் சிலம்பில் விளக்கியிருப்பது கொண்டும் உணரலாம். குழலால், யாழால், பண்ணால் எழும் பாடல் 'முல்லையம் தீம்பாணி' எனப்படும். இப்பண்ணிற்கும் பாடலுக்கும் சிறப்பாக உரிய இடம் முல்லை நிலம். ஏனெனில் இந் நிலத்தில்தான் இசையின் வித்து முளைத்தது. இசைக்கருவியால் தழைத்தது. கருவியில் முதற்கருவி குழல். அதனைக் கண்டவன் முல்லை நிலத்து மகன். அதன்வழி நரம்புக் கருவி. அதனையும் கண்டு வளர்த்தவன் முல்லை நிலத் தவன். இதனைப் 2 பெரும்பாணாற்றுப்படையில் உருத்திரங். கண்ணனார் அமைத்துப் பாடியுள்ளார். இதனைக் காட்டி:யாழ்நூல் செய்த விபுலானந்த அடிகளாரும் முல்லை நிலத்தவரே இசைக் கருவிகளின் மூலத்தர்' என்று காட்டினார். முல்லை தன் நில வகையால் முதலிடம் பெறுவது. இசை யிலும் முல்லைப் பண்ணாம் சாதாரிக்குரிய பருவம் கார் காலம். பொழுது மாலை. இவ்வாறு முல்லை மலரும் பருவத்தையும் பொழு தையும் கொண்டதால் பூவால்தான் இசைப்பெயர்கள் அமைந்தன என்பதையும் காட்டுகின்றது. தன்தாயாம் கொடியையும் குழலில் பின்னி முல்லையந் திங்குழல் என்று பெயர் வாங்கிக் கொடுத்தது. இவற்றிற்கெல்லாம் மேலாகத் தன் மணத்தையும் இசையில் கமழச் செய்தது. இசைஎழிற்கும் ஏழு வகை மணம் விதிக்கப்பட்டது. அவற்றுள் துத்தம் என்னும் இரண்டாவது இசை முல்லை மணத் திற்கு உரியது. முதல் இசை குரல் என்பதும் முல்லையின் குடும்பத்தைச் சேர்ந்த மெளவல் மணம் கமழ்வதாக அமைந்தது. இதனை நிகண்டுகள் யாவும் காட்டுகின்றன. 1. சிலம்பு 17 : 20 விளக்கவுரை 2 பெரும்பாண் : 175 - 182.