பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/209

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மக்கள் மலர்


ஆம்பற் பூ

ஒரு பூவிற்குள் பல ஊழிக்காலம்

'நூறாண்டு வாழ்க’- என்று வாழ்த்துவது நிறைவேறக் கூடியது. "ஆயிரம் ஆண்டு வாழ்க’ -என்றால் அது வாழ்த்து பவருடைய ஆர்வத்தின் வெளிப்பாடு. 'பத்தாயிரம் ஆண்டு......நூறாயிரம் ஆண்டு’ என்று, வளர்ந்து உலகம் அழியும் காலம் வரை அஃதாவது ஊழிக் காலம் வரை வாழ்க’ என்றால் அது வாழ்த்துபவருடைய தகுதி யைப் பொருத்து ஒரு கருத்து உள்ளதாகும். புலன் அழுக்கு அற்ற அறவோர் கபிலர் இவ்வாறு வாழ்த்தினார் என்றால் அதனை வெற்றுக் கொட்டாவி என்று துக்கத்தின் முன்னறிவிப் பாகக் கருதக் கூடாது. உலகம் அழிந்தாலும் உனது பெயர் நிலைத்திருப்பதாக என்னும் கருத்தை அவ்வாறு வாழ்த்துவதாகக் கொள்ளவேண்டும். இக்கருத்தும் வாழ்த்தப்படுபவரை இணைத்துப் பார்க்கத்தக்கது. -