பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174


ஆதன் என்று ஒரு சேர மன்னன். இவன் பெயரே வாழ்த்துச் சொல் இணையப் பெற்றது. வாழியாதன்' என்பது இவனது இயற்பெயர். மன்னர் இளங்கோ, முடிக்கோ பெருங்கோ என்றெல்லாம் அடைமொழி பெறுவர். மாறாகக் 'கடுங்கோ' என்று பெயர் பெற்ற சிலருள் இவன் ஒருவன், கடுமையைப் பகைவரிடம் காட்டிக் கடுங்கோ ஆனவன். மக்கட்குச் செல்வமாக வாழ்ந்தவன். இவற்றாலெல்லாம் செல்வக் கடுங்கோ வாழியாதன்' என்னும் நிறைபெயர் பெற்றவன். இவனை நிறைவாக வாழ்த்த முந்துகின்றது கபிலரது உள்ளம். 'ஊழிக்காலம் வரை உனது பெயர் நிலைத்திருப்பதாக' என்பதோடு முடிக்க அவர் உள்ளம் நிறைவு பெறவில்லை. பல ஊழிக்காலம்... ... எத்துணை பல? ஒரு பெரும் எண்ணிக்கையில் வாழ்த்த விழைகின்றார். ஆம்பல் ஊழிக்காலம் -என முடிக்க முனைந்து அதனாலும் மனம் நிறைவு கொள்ளாமல் அதற்கு மேலும், அதற்கு மேலும் ஆயிரம், ஆயிரம், ஆம்பல் ஊழி வாழ்க என்றார். அஃது என்ன ஆம்பல்? எத்துனை எண் கொண்டது பரிபாடல் விடைகூற அழைக்கின்றது. - திருமாலினுடைய கைகளின் பெருமையை அதன் எண்ணிக்கைப் பெருக்கில் காட்ட, கடுவன் இளவெயினனார் என்னும் புலவர் முனைகின்றார். - 'ஒருகை, இருகை, முக்கை, நான்கு...... பத்து கை, நூறு. ஆயிரம்...... பத்தாயிரம்...... நூருயிரம் கை கள்” என்று வளர்த்தினார். அதற்குமேல் "ஆம்பல் கைகள்” என்றார். அதிலும் பல அடுக்கிய கைகள் என்றார்.1 1. பதிற்றுக்கை மதவலி, நூற்றுக்கை ஆற்றல்; ஆயிரம் விரித்தகையம் மாய் பதினாயிரம் கை முதுமொழி முதல்வ: தாறாயிரம் கை ஆறறி. கடிவுள்; ாக்கையை." ಫಿಕ್ಸ್ಟಿಕ್ಸಿಲ್ಲಿಗಿ .