பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175


அப்படியென்றால், "ஆம்பல்' என்பது நூறாயிரத்திற்கு மேல் அமைந்த எண்ணிக்கை என்றாகின்றது. ஆம்பல்' என்னும் சொல் எண்ணிக்கைச் சொல்' என்பதைத் தொல்காப்பியம், 'ஐ, அம், பல் என வரூஉம் இறுதி - அப்பெயர் எண்ணினும்' என்னும் நூற்பாவால் தெரிவிக் கின்றது. இதில் 'ஐ' என்பது தாமரையையும் குவளையையும் குறிக்கும், அம்', என்பதுவெள்ளம் சங்கம் என்பவற்றைக் குறிக்கும். (பிற்காலத்தவர் குமுதம் சேர்த்துக்கொண்டனர்) பல்’ என்பது ஆம்பல் என்பதைக் குறிக்கும். ஆம்பல் ஒன்றையே குறிக்கும். இதே பரிபாடலில் கீரந்தையார் என்னும் புலவர் நெய்தல் என்பதையும் ஒர் எண்ணிக்கைச் சொல்லாகச் சேர்த்து, '... ... ... ... இரு நிலத்து ஊழியும் நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய செய்குறி (எண்ணிற்குக் கொள்ளப்பட்ட குறி) ஈட்டம்’ -என்றார். நெய்தலுக்குத் தொல்காப்பியம் இடம் வைக்கவில்லை. இவற்றையெல்லாம் கொண்டு பார்த்தால் "ஆம்பல்” என்னும் மலரைக் குறிக்கும் சொல் ஒரு பெரும் எண்ணிக்கைக்குக் குறியீடாகக் கொள்ளப்பட்டதை அறியலாம். இவ் ஆம்பல் எத்துணை எண் கொண்டது என்பதை ஒரளவில் பிங்கல நிகண்டுகொண்டு காணலாம். 3 ஊழி கொண்டது 1 கடல் (மாகடல் அன்று) - தொல்காப் பியத்தில் இல்லாதது. - - 3. கடல் கொண்டது 1 சங்கம் (அம் விகுதி) 8 சங்கம் கொண்டது 1 விந்தம் (அம் விகுதி) 8 விந்தம் கொண்டது 1 குமுதம் (ஆம்பலின் மறுபெயர்) 8 குமுதம் கொண்டது 1 பதுமம் (தாமரை-ஐ விகுதி) 1 தொல் : எழுத்து 894. 2 ւյթ : 2 : 13-16