பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/212

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
176


8 பதுமம் கொண்டது 1 நாடு (தொல், இல்லாதது) 8 நாடு கொண்டது 1 மாகடல் (தொல், இல்லாதது) 8 மாகடல் கொண்டது 1 வெள்ளம் (அம் விகுதி), பிங்கலம் காட்டும் இவ்வளர்ச்சியில் புதுச் சேர்க்கைகள் இருப்பினும் ஆம்பல் எண்ணிக்கையைத் தெரிந்துகொள்ள உதவுகின்றது. இவற்றைக் கொண்டு உறழ்ந்து பார்த்தால் 576 ஊழி கொண்டது ஒர்ஆம்பல் என்று ஆகும். இக் கணக்கெல்லாம் எவ்வளவில் நடைமுறையில் இருந்தன என்று சொல்ல இயலாது. கோடிக்குமேல் கணக்கிட இப்படியெல்லாம் குறியீடுகள் காண முனைந்த முன்னைச் சான் றோரது நோக்கம் போற்றற்குரியது. நாம் போற்றி வளர்க்காமல் விடுத்தோம். பேருள்ளம் கொண்ட பெரும்புலவர் பெருமகனார் கபிலர் 576 ஊழிக்கு மேலும் பல அடுக்கிய காலம் வாழ்க என்றுவாழ்த்திய பாடல் பகுதி, 'அடைஅடுப்பு அறியா அருவி ஆம்பல் ஆயிரம் வெள்ள ஊழி வாழி ஆத! வாழிய பலவே'2 எனக் காட்டுகின்றது. முடிவான பேரெண்ணிக்கையாகிய வெள்ளம் அளவு வாழ்க', என்று மேலெல்லை காட்டினார் எனலாம். இந்த எண்ணிக்கைக் குறியீட்டால் "ஆம்பல் முதலிய மலர்கள் ஊழியையும் உள்ளடக்கிய பூக்கள் ஆகின்றன. ஆம்ப லுடன், நெய்தல், குவளை, தாமரை ஆகிய மலர்கள் இடம் பெற்றுள்ளன. இவை யாவும் நீர்ப் பூக்கள். ஏன் இவை எண்ணிக்கைக் குறியீடாகக் கொள்ளப்பட்டன? நீர்ப் பூக்கள் தனிப் பூ வகை. எண்ணுவதற்கு வாய்ப் பானவை. இவற்றுள் தாமரை ஒரு தனிப் பிறவி, அதனை விடுத்துப் பார்த்தால் மற்றவை அனைத்தும் ஒரு குடும்பம். இக் குடும்பம் அனைத்து நிலத்திலும் பூப்பவை. ಸ್ಥಳಿ:64, 1848, 1653-65, 2 பதிற் 68:19-21, !