பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179


'அருவி ஆம்பல்” என்பதையே கொடுத்தனர். கபிலர், கருத்தில் லாமலா இத்தொடரை அமைத்தார்? ஆழ்ந்த கருத்தைப் பொதித்தே அமைத்தார். அக்கருத்து ஆம்பல் எ ன்னும் சொல்வரலாற்றின் அடித்தளம் காட்டுவது. அச்சொல்வரலாற்றின் வாயிலாக ஆம்பல்தான் அதன் குடும்பத்தின் தலைமைப்பேற்றைக் கொண்டதையும் அறிலாம். தொல்காப்பியம் குறித்த பல் என்னும் இறுதி என்பது "ஆம்பல்' என்னும் சொல்லைக் குறிக்கும். இதன் முதல்நிலை "ஆம்" என்பது. அதற்கு நீர் என்று பொருள். அஃதும் ஆற்று நீரையோ கடல் நீரையோ குறிக்காது. மழை நீருக்கு 'அம்' என்பது மூலச்சொல். "ஆம்" என்பது மலையில் தோன்றும் நீரைக் குறிக்க வழங்கிய மிகப் பழஞ்சொல். மலை நீரிலும் மலை முகட்டில் ஊறிக் கசிந்து வரும் நீரைக்குறிக்கும். இதனை விளக்குவது போன்று பெரும்புலவர் நக்கீரர், 'யானையின் கன்னத்தில் வியர்வை போன்று ஒரு வகைத் தேன் போன்ற நீர் கசியும் இதற்கு மதநீர் அல்லது கடாம் என்று பெயர். இது கசிந்து ஊர்ந்து வருவது போன்று மலை முகட்டில் ஊர்ந்து கசியும் "ஆம்" -நீர்’ என்பதை, "கடாஅ யானைக் கடவுள் மருங்கு உறழ (போல) ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி (முகடு)' என்றார். இச் சின்னிர் கூடி அருவியாக இழியும் நீரையும் "ஆம்" என்னும் சொல்லால் குறித்தனர். "வரை ஆம் இழிய' (ஐங் : 228) "ஆம் இழி சிலம்பின்' (குறு : 308) "ஆம் இழி அணி மலை’ (கலித் 48 : 1) "வேய் பயில் இறும்பின் (சிறுமலையில்) ஆம் அறல் பருகும்' (நற் 213 : ) 'அறுநீர்ப் பைஞ்சுனை ஆம் அறப் புலர்தலின்’ (அகம் : 1 : 12) "ஆம் அறப் புலர்ந்த கல்நெறி' (அகம் : 75, 8 ; 9) -سمہ سہ، س-سی:- س --------- ~~م۔--سدسم ,18 ,5.47 205 : في عامي 1