பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181


ஆம்பலுக்கு அடைமொழியாகி "அருவி ஆம்பல்' எனப்பட்டது கபிலரால், இத்தொடர் ஆம்பல் நீரில் தோன்றிய இவ்வகைப் பூக்களுக்குக் குடும்பம் வகுத்தத் தகுதியைத் தருகின்றது. 外 g குடும்பத்தில் குழப்பம் ஆம்பல் குடும்பத்தில் உறுப்பினர் பலரா; சிலரா? இதற்குரிய விடையைக் காண இலக்கியங்களிலும் நிகண்டுகளிலும் புகுந்தால் தலைசுற்றும் அளவு குழப்பமே கிடைக்கின்றது. அவற்றிலும் பிற்கால நூல்களே இக்குழப்பத்தை வழங்குகின்றன. நிகண்டுகள் காட்டும் சொற்களும் அமைப்புகளும் பெருங் குழப்பமே. ஆம்பல், குவளை, நெய்தல், காவி, நீலம், கழுநீர், அல்லி, குமுதம், கல்லாரம், பானல், இந்திவரம், கைரவம், எருமணம், உற்பலம் என்று சொற்பட்டியலைத் தொகுக்கலாம். ஆனால், ஒவ்வொன்றாக அடையாளங் காணப் புகுந்தால் ஒரு நூல் கூறு வதை மறு நூல் மாற்றுகின்றது. பிங்கல நிகண்டோ எல்லா வற்றையும் எல்லாமாகக் கலக்கின்றது. பிற்கால இலக்கியங்கள் வடமொழி, தென்றமிழ் வேறுபாட்டில் மனம்பற்றாதவை. நிகண்டுகளும் அவ்வாறே. இந்நூல்கள் மொழியியல் அடிப்படையில் வேர்ச்சொல்லின் வளர்ச்சிக்கேற்ற பொருளில் சொற்களைக் கையாண்டுள்ளன என்று நிறைவாகச் சொல்ல இடம் வைக்கவில்லை. எனவே, பழங்காலச் சங்க நூல் கள் ஆங்காங்கு வைத்துள்ள கருத்துகளைக் கொண்டு ஆம்பற் குடும்பத்தினை வரையறைப்படுத்த முடிகின்றது. ஆம்பல் குடும்பம் நீர்வளம் நிறைந்த வயலும், வயல் சார்ந்த இடமும் கொண்டது. ஆனால், அந் நிலம் ஆம்பலால் பெயர் பெறவில்லை. மருத மரப் பூவின் பெயர் பெற்றது. தொல்காப்பிய உரையாசிரியர்கள் மருத நிலத்துக்குரிய மலர் களாகத் தாமரையையும் ஆம்பலுக்குரிய சொல்லாகக் கழுநீரையும் குறித்தனர். பின்னர் எழுந்த நம்பியகப்பொருள், !