பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186


3. நெய்தல் - வெளிர் நீலம் இந்திவரம் 4. காவி - அரு நீலம் கழிப் பூ ஒற்றுமையில் வேற்றுமை நான்கு வகைகளாக உள்ள இக்குடும்பத்தின் தலைமை மலர் ஆம்பல், நீரில்பூப்பவை என்னும் சொல்வரலாற்றிலும் மூலமாக ஆம்பல் அமைந்ததைக் கண்டோம். பூக்களின் மூலத்தைக்காண அவற்றின் நிறமே சான்றாகும். சிவப்பும் வெளுப்புமே பூக்களின் முதன்மை நிறங்கள் என்பதைச் செடியியல் நூலார் நிறுவி யுள்ளனர். அடுத்த நிறம் பொன்மையாம் மஞ்சள். அடுத்தது நீலம், பிறயாவும் இனக்கலப்பால் தோன்றியவை. இங்கே காணப்பட்ட நான்கில் ஆம்பல் ஒன்றே செம்மையும் வெண்மையும் கொண்டது. குவளை செம்மையும் நீலமும் கொண்டது. நெய்தலும் காவியும் நீலநிறம் ஒன்றே கொண்டவை. சிவப்பிலும் ஆம்பல் கருஞ்சிவப்பு நிறங்கொண்டது. இதனால் அரக்கு ஆம்பல்' என்ற பெயரையும் கொண்டது. இவ் அரக்காம்பல், வெள்ளாம்பல் இவற்றின் கலப்பினத்தோற்றமே இளஞ்சிவப்பு நிறங்கொண்ட சேதாம்பல். குவளையில் அரக்கு நிறம் இல்லை; இளஞ்சிவப்பே உண்டு அரக்குக் குவளை'என்று ஓரிடத்தில் வந்துள்ளது. ஆனால், கருஞ்சிவப்பில் குவளை இல்லை. எனவே இந்நிற அமைப்பால் ஆம்பல் முதலில் தோன்றியதாகும். - பற்ற மூன்றிலும் வெண்மை நிறம் இல்லை. ஆனால் மூன் றிலும் நீலம் உண்டு. ஆம்பலில் நீலம் இல்லை. எ ன வே . ஆம்பல் ஒரு தனி வகைஆகும். மற்ற மூன்றும் ஒரு வகையாகும் நான்கு வகைகொண்ட இக்குடும்பத்தை நிற வேறுபாட்டைக் கொண்டு இரண்டாகத் தொகுத்துச் சொல்லலாம். இவ்விரண்டு வகையாகக் கொள்ள மற்ற அமைப்புகளும் இடம் தருகின்றன. ஆம்பல் அளவால் பெரியது. இதன் இதழ்கள் 3; அங்குலம் முதல் 6 அங்குலம் வரை நீளமாக வளரும், இதழ்களும் அதிகம் கொண்டது. 16 முதல் 24 வரை இதழ்கள் அமையும். - ಶ್ಲಣಣTu மூன்றும் அளவில் ஆம்பலைவிடச் சிறியவை. 2. அங்குலம் முதல் 4 அங்குலம் நீளமே கொண்டவை. இதழ்களும் எண்ணிக்கையில் குறைவானை