பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
190


ஆம்பல் மலர் போல அடிக்கடிநீ வாய் திறந்து தேம்பி அழாதேநீ தினகரனே கண்வளராய்' -இது ஒரு நாட்டுத் தாலாட்டு, இவை எல்லாம் மகளிர் வாய்க்கும், மழலையர் வாய்க்கும். ஆம்பல் உவமை. மக்களினத்திற்கு உவமையானால் மற்றைய இனத்திற்கு உவமை ஆகக் கூடாதா என்ன? ஆகலாம். ஒர் ஆம்பல் வாய் திறந்து மலர்ந்தது. இதற்கொரு உவமை பிறந்தது. மற்றொரு வாயே உவமையாயிற்று. மூடிய வாய் அன்று; திறந்த வாய். திறந்த வாயும் அன்று: பிளந்த வாய், பிளந்த வாயிலும் கொட்டாவி விட்டுப் பிளந்த வாய். மாந்தர் கொட்டாவி அன்று; பறவைக் கொட்டாவி. பறவையிலும் அரிதில் தென்படும் பறவை. வெள்ளைக் காக்கை கொட்டாவி விட்டது. எவ்வாறு? ... ... ... - ... ... ... ... ஆம்பல் சிறுவெண் காக்கை ஆவித்து கொட்டாவிவிட்டது) அன்ன 6)ouωθω ού'fμμό"1 முன்னே கண்டவை செவ்வாம்பல் உவமை. இது வெள்ளாம்பல் உவமை. ஆம்பல் வாய்க்கு உவமையாக இதற்கு வேறுபடும் மூன்றும் கண்ணிற்கு உவமையாகின்றன: குவளைக் கண் : 'குவளை அம் கண்' (குறு 13) 'அம் செங் கழுநீர் அரும்பவிழ்த் தன்ன செங்கயல் நெடுங்கண்' (சிலம்பு. 1 : 1.38) "மையவாம் குவளை யெல்லாம் மாதர்கண் மலர்கள் பூத்த கையவாம் உருவத் தார்தம் ασφωή குவளை பூத்த” . (கம்ப :நீர்விளையாட்டு:3) நெய்தல் கண்: "பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்

  • $***雙•。@。。。。 * * * * * * * * * * * * * * * * * * * * * * *

கயம் முழ்கு மகளிர் கண்ணின் ம ானும்” (குறு 9)