பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/227

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
191


'கண்போல் பூத்தமை கண்டு, துண் பல் சிறுபா சடைய நெய்தல்' (நற் : 27 : 9, 10) காவிக் கண்: காவியங் கண்ணார் கட்டுரை”( சிலம்பு: 14 : 1.38) "காவியங் கண்ணியாய்' (சீவ. சி : 316) இவ்வுவமைகள் இயற்கையாயுள்ள வாய்க்கும் கண்ணிற்கும் ஆகியவை. செயற்கையில் மாறுபட்டு நிற்கும்போது இவ்வுவமை களும் மாறுபட்டுநின்றமையும் சான்றாகின்றன. கண்ணாக மாறு பட்டுப் பசந்தபோது 'பசிந்த என் கண்ணே ஆம்பல் தாதேர் வண்ணங் கொண்டன'1 -என ஆம்பல் மாறுபட்டுக் கண்ணிற்கு உவமையாயிற்று. இதுபோன்றே புணர்ச் சியின்போதும், வாய் நஞ்சு தோயும்போதும் நீல மலர்கள் வாய்க்கு உவமையாயின. இவ்வுவமைகள் ஒரே சீராக இலக்கியங்களில் உள்ளன. ஆனால், மலரும் பொழுதில் சில சில இலக்கியங்கள் சிற்சில இடங்களில் மாறுபட்டும் உள்ளன. அவை பெரும்பாலும் பிற்காலத்தவைகளாக உள்ளன. இவற்றிற்கெல்லாம் காரணம் உண்டு. ஆம்பல் குடும்பத்து மலர்கள் மிகப் பெருகியிருந்தன . நீர்வளமே இதற்குக் காரணம். செறிந்தும் மிடைந்தும் பல்கியும் பூத்த இவைகள் காண்போர்க்கு மயக்கத்தை ஏற்படுத்தின என்பர். இம்மலர்த் தண்டின் கிழங்கு களின் வேர்கள் பின்னியும் ஒட்டியும் பாய்ந்தும் கலப்பினங்கள் தோன்றுவதற்குக் காரணமாகி இக்கலப்பினங்கள் இருவகை இனத்தன்மைகளையும் மயங்க வைத்தனஎனலாம். இவையெல்லாம் நிலத்தால் மருதமும் நெய்தலுமாக இருநிலத்தன. ஆயினும், இவ்விரு நிலங்களும் கலந்த மயக்கம் அதிகம். அண்மை அண்மை யில் இவைநெருங்கி வளர்ந்தமையையும் இலக்கியங்கள் குறிக்காமல் விடவில்லை. - 1 ஐங் : 34